எம்.கே ஃபைஸி-யின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உடனே அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி SDPI ஆர்ப்பாட்டம்.

பழிவாங்கும் அரசியலை நிறுத்து!
எம்.கே.ஃபைஸியை விடுதலை செய்!

SDPI_கட்சி தேசிய தலைவர்

எம்.கே ஃபைஸி-யின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உடனே அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் #திருச்சி பாலக்கரை ரவுண்டானவில் SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் K.தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மண்டல செயலாளர் நியமத்துல்லா மற்றும் தெற்கு மாவட்ட துணைத் தலைவர்கள் Y. ரஹீம்,தளபதி. அப்பாஸ்
தெற்கு மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் K முபாரக் அலி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பொதுச் செயலாளர் Er.A.முகமது சித்திக் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இமாம் R.ஹஸ்ஸான் பைஜி.,MBA.,LLB.,அவர்கள் கலந்துக் கொண்டு தேசிய தலைவரை விடுதலை செய்யக்கோரி கண்டன உரையாற்றினார்.

மேலும் திருச்சி.ஜாகீர் அவர்கள் கண்டன உரை ஆற்றினார்கள்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந.சிராஜ் அவர்கள் ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்.

இந்த கண்டன ஆர்பாட்டத்தில் SDTU தொழிற்சங்க மாநில செயலாளர் K.முகம்மது ரபீக்,வடக்கு மாவட்ட தலைவர் ஜவகர் அலி, வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் அலாவுதீன், தெற்கு மாவட்ட செயலாளர்கள் மதர்.Y. ஜமால் முகம்மது,M.A.,M.phil.,Er.N.G. சதாம் உசேன்,மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் A.S.அப்துல் காதர் (பாபு) B.com.,DCA.,கிழக்கு தொகுதி தலைவர் I சபியுல்லா B.com., மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா., திருவெறும்பூர் தொகுதி தலைவர்
Er.Iஷேக் முகம்மது,ஶ்ரீரங்கம் தொகுதி தலைவர் முகமது யாசிர்,மணப்பாறை தொகுதி செயலாளர் ஜின்னா ,வர்த்தகர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் MAJ.சாதிக் பாஷா, SDTU தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சக்கரை மீரான், வர்த்தக அணி மாவட்ட தலைவர் Dr.S.பக்ருதீன்,விமன் இந்தியா மூவ்மெண்ட் திருச்சி மாவட்ட தலைவர் தௌலத் நிஷா, தொண்டரணி மாவட்டத் தலைவர் முகமது ஆரிப், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட தலைவர் உபைதூர் ரஹ்மான்,கல்வியாளர் அணி திருச்சி மாவட்ட செயலாளர் பத்ரு ஜமான்,
உள்ளிட்ட நிர்வாகிகள் , பொதுமக்களும் கலந்துக் கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்நிகழ்வை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் மஜித் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.

இறுதியாக மாவட்ட பொருளாளர் பிச்சைக் கனி அவர்கள் நன்றி உரையாற்றினார்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த துரை வைகோ எம்.பி

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (03.06.2026) சந்தித்தேன். அப்போது எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று முக்கிய கேரிக்கைகளுக்கான கடிதம் வழங்கி, அதற்கான…

    எதற்காக போர் வீரர்களை தயார் செய்தோமோ…எதற்காக வீரர்களை போர்க்களத்திற்கு அழைத்து சென்றோமோ..எதற்காக போரிட்டோமோ…அதற்கான காரணத்தை, போரை வழிநடத்துபவர்கள் மறுத்து/மறந்து போனால்… -அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்

    அன்பார்ந்த கழக நிர்வாகிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். என்னுடைய பெற்றோர் எனக்கு அளித்த வரமாக நான் பெருமிதம் கொள்ளும் நிமிர் நெஞ்சமும், நேர்கொண்ட பார்வையுமாக, மனசாட்சிக்கு எள்ளளவும் பயப்படாமல், எனது கடமையை இது நாள் வரை சமரசம்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *