
சமூக ஆர்வலரும், பத்திரிக்கையாளரும் ஆகிய முத்துசூர்யா அவர்களுக்கு 20 ஆண்டுகால பிரச்சனையை தீர்க்க உறுதுணையாக இருந்த பத்திரிக்கையாளர்கள் ,பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி.. நன்றி.. நன்றி..
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு
நன்றி.. நன்றி.. நன்றி..
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், கீழரசூர் ஊராட்சி தெற்கு தெரு (டிரைவர் மருதமுத்து தெரு) மக்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக தெருவில் வடிகால் அமைக்கப்படாமல் இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் தெரு மக்கள் பட்ட பல இன்னல்கள், மற்றும் மன உளைச்சல்களுக்கு ஆளாகி நடக்கக் கூட முடியாமல் கழிவு நீர் கலந்த தெருவில் நடந்து சென்று வந்தனர்.

பார்வை: லால்குடி வருவாய் வட்டாட்சியர் அவர்கள் வடிகால் அமைத்திட ஆணையினை புள்ளம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பினார்.
கடிதம் ந.க.அ 6/ 10275 /2023 நாள் :13.12.2023
15 ஆண்டுகளாக பொதுமக்கள் கிராம சபை கூட்டங்களில் ஒவ்வொரு முறையும் முறையிட்டும், துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் மனுக்கள் கொடுத்தும்,3 முறை ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவி முடிவுற்ற நிலையில் தெரு மக்களுக்கு எந்தவித தீர்வும் எட்டப்படாத நிலையில் அந்தத் தெரு மக்கள் சார்பாக மனுதாரர்கள்
30/1/ 2025 முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு புகார் மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே என் அருண் நேரு அவர்களிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில்
4. 3 .2025 நேரில் வந்து வடிகால் அமைத்திட வழிவகை ஏற்படுத்தித் தந்த
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும்,
சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் அவர்களுக்கும், (லால்குடி,கல்லக்குடி ) காவல் துறையினர் அவர்களுக்கும்,
கிராம நிர்வாக அலுவலர் அவர்களுக்கும்,
ஊராட்சி செயலர் ந. கந்தசாமி அவர்களுக்கும்,
தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் மனித விடியல் மோகன் அவர்களுக்கும்,
மனுதாரர்கள் க. முத்துசாமி (எ) முத்துசூர்யா – வளர்ச்சி மன்ற ஒருங்கிணைப்பாளர், மணிகண்டன் (எ) மணிபதான் – வளர்ச்சி மன்ற செயலாளர் அவர்களுக்கும், வளர்ச்சி மன்ற அனைத்து பொறுப்பாளர் அவர்களுக்கும், ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து ஊராட்சி இளைஞர்களுக்கும், அனைத்துக் கட்சி நிர்வாகிகளுக்கும், அனைத்து பத்திரிகை நண்பர்களுக்கும் எப்போது தான் இந்த தெருவில் கழிவுநீர் வடிவால் அமைக்கப்படுமோ என்று எதிர்பார்த்த பொதுமக்களுக்கும் ,
தெரு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து 20 ஆண்டுகால பிரச்சனையை தீர்வு கண்டதில் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

நன்றி.. நன்றி.. நன்றி..
இப்படிக்கு
கீழரசூர் ஊராட்சி தெற்கு தெரு (டிரைவர் மருதமுத்து தெரு )பொதுமக்கள்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அடுத்த மனுகள்
கோரிக்கை எண் 1:
கீழரசூர் ஊராட்சி அடுத்த தலைமுறையினர் நல் வாழ்விற்காக நீர்நிலை பாதுகாப்புத் திட்டத்தின் அடிப்படையில் நல்லியம்மன் தோப்பு ஏரி உள்பட ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து ஏரிகளையும் சர்வே அளவு செய்து சர்வே கல் நட்டு ஏரிகளின் அளவை உறுதி செய்ய தமிழக முதலமைச்சர் அவர்களை இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறோம்.
மனு எண் 2:
தமிழகத்திலேயே சமுதாயக்கூடம் இல்லாத ஊராட்சியாக உள்ள கீழரசூர் ஊராட்சிக்கு சமுதாயம் கூடம் கட்ட நிதி ஒதுக்கிட வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
மனு எண் 3 :
ஊராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் (புறம்போக்கு நிலங்களில்) அடர் வனம் அமைத்திட அனுமதி வழங்க துறை சார்ந்த உதவிகள் அனைத்தும் செய்திட வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி