சுதந்திர இந்தியாவில் பிறக்கும் எங்களது பேரக்குழந்தையாவது மின்சார விளக்கு வசதியுடன் பிறப்பதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டுகோள் பொதுமக்கள் கோரிக்கை

19/03/2025 புதன்கிழமை இன்று , திருச்சி மாவட்டம் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் திருமதி A செல்வி அவர்களிடம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மக்களின் கோரிக்கையை ஏற்று வரிசைகிரகமாக கூடிய விரைவில் இவர்களுக்கு மின்னிணைப்பு வழங்குவதற்கு ஆவணம் செய்வதாக உறுதியளித்தார். மேலும் இது சம்பந்தமாக துறை அதிகாரிகளுக்கு உடனடியாக களப்பணி செய்து தகவல் அளிப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் A செல்வி தாயுள்ளம் கொண்டவர் ஏழை எளிய மக்களின் பிரச்சினையை தனது பிரச்சினையாக பார்ப்பார்கள். கடந்த ஞாயிறு அன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் குழந்தையின் வீட்டில் மின் இணைப்புக்காக விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு உடனே மின் இணைப்பு வழங்குவதற்கு உத்தரவிட்டார். அது விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 3 மணி அளவில் அந்த குழந்தையின் வீட்டில் மின்சாரம் வசதி வழங்கப்பட்டது. அதன் பின்னர் அந்த பெண் குழந்தைக்கு நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று ஆசீர்வாதம் வழங்கினார். இவர் மக்களின் பிரச்சினையை தனது பிரச்சினையாக பார்த்து சட்டப்படி தீர்ப்பதற்கு முயற்சி செய்கிறார். தற்பொழுது 15 வருடமாக மின்சாரம் இன்றி தவிக்கும் இந்த மக்களும் இவரிடம் தங்களது அவல நிலையை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அம்பேத்கார் நகர் எக்ஸ்டென்ஷன் பிரிவில் கடந்த 15 வருடங்களாக எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி சொந்த ஊரிலேயே அகதிகளை விட கேவலமான நிலையில் பஞ்ச பரதேசிகள் போல் வாழ்ந்து வாழ்ந்து வருகின்றனர். திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் போது நாங்கள் இந்த இடத்திற்கு அரசாங்கத்தாலும் அதிகாரிகளால் அனுப்பப்பட்டனர். அதற்குப் பின்னர் அரசாங்கமும் அரசு அதிகாரிகளும் மாறிக்கொண்டே சென்றனர் அவர்களை அனைவரும் மறந்து விட்டனர்.

இவர்கள் ஏழைகள் பஞ்சப்பிரதேசிகள் இவர்களிடம் பண வசதி கிடையாது, பண வசதி இருந்திருந்தால் இந்த ஊரை விட்டு என்றோ சென்றிருப்பார்கள். சென்னை உயர்நீதிமன்ற நீதிமன்றத்தின் மதுரை கிளையை அணுகி இந்த இடத்தில் வாழ தகுதி உள்ளவர்கள் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று உத்தரவு கிடைத்தது.

ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவர் இந்த மக்களுக்கு பண உதவியும் சட்ட ஆலோசனைகளும் அரசாங்கத்தையும் அரசாங்க அதிகாரிகளையும் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பதை செய்த வண்ணம் உள்ளார். இன்று வரை கிட்டத்தட்ட 5-6 லட்சம் ரூபாய் தற்காலிகமாக கொடுத்துள்ளார். அதை தவிர இவர்களிடம் வேறு எந்த ஒரு வசதியும், வழியும் கிடையாது. கடவுளைத் தவிர வேறு யாரும் இவர்கக்கு உதவி செய்வதற்கு இல்லை.

உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இவர்கள் மின் வசதிக்கு 28/01/2025 அன்று விண்ணப்பம் செய்துள்ளோம். தற்பொழுது உள்ள நிலைமையின் படி இவர்களுக்கு மின்சார வசதிகள் கிடைப்பதற்கு குறைந்தபட்சம் 4-5 மாதங்கள் ஆகலாம் என்று தெரியவந்துள்ளது. மின்சார வசதி இல்லாமல் இவர்கள் மிகுந்த இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்றனர். சூரிய மின்சாரமோ இருப்பது சிறிது நேரம் தான். குழந்தைகள் படிப்பதற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர் தெருவிளக்கில் படிக்கின்றனர் அல்லது மொபைல் வெளிச்சத்தில் படிக்கின்றனர்.

15 வருட போராட்டங்களுக்குப் பின்னர் படுத்தப் படுக்கையாகிவிட்ட நோய்வாய்ப்பட்டிருந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மனைவி மின்சார வசதி இல்லாத காரணத்தினால் உயிரிழந்துவிட்டார். இவரது ஒரே மகளுக்கு போராடி திருமணம் செய்து , அவளுக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் குழந்தை பிறக்க உள்ளது. ஒரே ஒரு மின்கம்பம் நட்டால் இவரது வீட்டிற்கு மின்சாரம் வந்து விடும். தயவு செய்து அந்த ஒரு போஸ்டை நட்டு எங்கள் பேரக்குழந்தையாவது சுதந்திர இந்தியாவில் மின்சார விளக்குடன் பிறப்பதற்கு வழி வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மக்களால் தாயுள்ளம் கொண்டவர் என அழைக்கப்படும் மின்சார வாரிய திருச்சி மாவட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் திருமதி A செல்வி அம்மையார் உரிய நடவடிக்கை எடுத்து சுதந்திர இந்தியாவில் பிறக்கும் குழந்தைக்கு வெளிச்சத்தில் பிறப்பதற்கு இருப்பதற்கு வாழ்வதற்கு மின் வசதி கொடுப்பார்கள் என நம்புகின்றனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *