
ரன் திருச்சி மாநகராட்சியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி நேற்று மாலை 6:00 மணி முதல் மாநகராட்சி அலுவலக நுழைவாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று இரவு முழுவதும் விடிய விடிய போராட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி வளாகத்திற்கு வெளியே துப்புரவு பணியாளர்கள் தரையில் படுத்து உறங்கினர்.
இன்று காலை தொடர்ந்து போராட்டம் இரண்டாவது நாளாக நடந்து கொண்டிருக்கிறது. இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு வரும்படி அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.