பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள பெண் காவல் புலன் விசாரணை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான நான்காம் கட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள பெண் காவல் புலன் விசாரணை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான நான்காம் கட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி திருச்சி காவல்துறை பணியிடை பயிற்சி மையத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் சுதர்சன் தலைமையில் 22.03.25 நடைபெற்றது. மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு இளஞ்சிறார் நீதி சட்டம் 2015 பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 ஆகிய சட்டங்களின் முக்கிய பிரிவுகள் குழந்தை நலக்குழு இளஞ்சிறார் நீதிக் குழுமம் மற்றும் குழந்தைகள் உதவி மையம் செயல்பாடுகள் பணிகள் நடைமுறைகள் குறித்தும் ஆண்டிற்கு ஆறு முறை நடக்கும் கிராம சபைக் கூட்டங்களான


ஜனவரி 26 மார்ச் 22 மே 01 ஆகஸ்ட் 15 அக்டோபர் 02 நவம்பர் 01 ஆகிய நாட்களிலும் கிராம வட்டார மாவட்ட பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி மண்டல வார்டு அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்கள் காலாண்டிற்கு ஒரு முறையும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் மாதம் தோறும் நடக்கும் நாளில் காவலர்களின் பங்கேற்பு குறித்தும் குழுக்களில் உள்ள உறுப்பினர்களின் விவரம் இலவச தொலைபேசி எண்களான குழந்தை உதவி மையம் 1098
பெண்கள் உதவிமையம் 181

மூத்தகுடி மக்கள் உதவிமையம் 14567 பள்ளி மாணவர்களுக்கான உதவி மையம் 14417 இணைய வழி குற்றம் 1930 போதை சிகிச்சை மீட்பு மறுவாழ்வு மற்றும் மனநலம் சார்ந்து 14416 குறித்து பயிற்சி அளித்தார். பயிற்சியில் 95 க்கும் மேற்பட்ட திருச்சி மற்றும் மாநகரம், கரூர் பெரம்பலூர் புதுக்கோட்டை அரியலூர் மற்றும் இரயில்வே காவல் ஆளிநர்கள் கலந்துக் கொண்டனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *