

திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழகத்தின் சார்பாக புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு “இப்தார் நோன்பு” திறக்கும் நிகழ்வு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் , முப்தி முஹம்மது, ரூஹூல் ஹக் ஹஜ்ரத்
தலைவர் – திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது .

இந்நிகழ்வில் உளமா பெருமக்கள் ஜமத்தார்கள்
அனைவரும் திரளாக கலந்து கொண்டு நோன்பு திறந்தனர். அதனைத் தொடர்ந்து அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் தொழுகையையும் நடத்தி முடித்து, புனித பெருநாளுக்கான வாழ்த்துக்களையும் இஸ்லாமிய பெருமக்களுக்கு அமைச்சர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் .
இந்நிகழ்வில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமத், மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் மற்றும் கழக நிர்வாகிகள் இஸ்லாமிய பெருமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்…
இறைவனிடம் கையேந்துங்கள்
அவர் இல்லை என்று சொல்லுவதில்லை என்ற பாடலை பாடி…
இந்த பாடலை பாடிய அதே குரல்தான் ஓடி வருகிறார் உதயசூரியன் பாடல் பாடியவர் என மேடையில் அமைச்சர் பாடல் பாடினார்.
மந்திரம், தந்திரத்திற்கு ஆளாகாத மார்க்கத்தை கொண்டவர்கள்தான் இஸ்லாமியர்கள் என சொன்னவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.
பாரம்பரியத்தை விடாமல் பின்தொடர்பவர்கள் இஸ்லாமியர்கள் என சொன்னவர் பேரறிஞர் அண்ணா
வக்பு வாரிய மசோதாவை 115 முறை திருத்தியுள்ளது மத்திய அரசு. இதில் ஏன் மத்திய அரசு இவ்வளவு அக்கரை காட்டுகிறது? அதில் இவர்களுக்கு என்ன கவலை!
அதில் அக்கறை காட்ட. தேவையில்லை என சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டு வந்தவர் முதலமைச்சர்.
இறைவனிடம் துவா கேட்கும் உங்களிடம் நாங்கள் துவா கேட்கிறோம். உங்களின் தூய்மையான வாக்குகளை கேட்கிறோம், முதலமைச்சரின் நலமுடன் வாழ வேண்டும் என உங்களிடம் துவா கேட்கிறோம் என்றார்.