
திருவெறும்பூர் சிப்காட் தொழிற்சாலையில் மிஷினரி பொருட்களை திருடிய நான்கு பேரில் ஒருவரை திருவெறும்பூர் போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்
திருச்சி KK நகர் பகுதியை சேர்ந்தவர் பிண்டோ (82) திருவெறும்பூர் சிப்காட் தொழிற்சாலை இன்ஜினியரிங் கம்பெனி நடத்தி வருகிறார்
கடந்த 23ஆம் தேதி கம்பெனி விடுமுறை என்பதால் கம்பெனியில் வேலை பார்க்கும் வாட்ச்மேன் ஷாஜகான் (65) மதியம் சாப்பிடுவதற்காக வெளியில் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது தொழிற்சாலையில் மிஷனரி பொருட்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.
உடனடியாக கம்பெனி ஓனருக்கு தகவல் கொடுக்கப்பட்டது
அதன் அடிப்படையில் பிண்டோ திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கம்பெனியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்த பொழுது அதில் கம்பெனிக்குள் நுழைந்த நான்கு மர்ம நபர்கள் மிஷனரி பொருட்களை திருடி செல்வது உறுதிப்படுத்தப்பட்டது
அதன் அடிப்படையில் திருவெறும்பூர் அருகே உள்ள கைலாசபுரம் கணேஷ் நகரை சேர்ந்த பாண்டியன் மகன் லெமன் சக்திவேல் (எ) சக்திவேல் ( 21 ) என்பவனை திருவெறும்பூர் போலீசார் கைது செய்து அவனுடன் மிஷனரி பொருட்களை களவாடிய மேலும் 3 பேர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.