
.
திருச்சி விமான நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ராமஜெயம் கொலை நடந்து 13 ஆண்டுகள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கவில்லையே என கேட்டபோது,
நாங்கள் வந்து தான் கண்டுபிடிக்க வேண்டுமோ என்னவோ என்றார்.
அந்த அளவிற்கு தான் நமது நாட்டில் சட்டம் ஒழுங்கு நடைமுறையில் இருக்கிறது.
பெரிய தலைவர் அமைச்சரின் தம்பி அவரின் கொலையிலேயே 13 ஆண்டுகளாக குற்றவாளிகள் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் அதே பிரச்சனை தான் நீடித்து வருகிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு,
கொடநாடு கொலை, பொள்ளாச்சி பாலியல் வழக்கு உள்ளற்றவற்றை நாங்கள் வந்தால் விசாரிப்போம் என்று கூறியவர்களே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒவ்வொன்றும் காலம் கடத்தி கடத்தி விடப்படுகிறது ஒழிய
நியாயமான, உண்மையான விசாரணை நடத்தி முறையான தண்டனைகளை பெற்றுக் கொடுத்து வருவதில்லை. அரசுக்கு எது தேவையோ அதை எடுத்துக் கொள்கின்றது மற்றதை மூடி மறைக்கின்றது.
டாஸ்மார்க் ஊழல் என அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது அனைவருக்கும் தெரியும் அது முடிந்ததா இல்லையா என்பது யாருக்கும் தெரியவில்லை. அதில் என்ன நடந்தது யாருக்காவது தெரியுமா அதில் தவறு நடந்துள்ளதா இல்லையா அதற்கு நடவடிக்கை எடுக்குமா ஒரு லட்சம் கோடி ஆயிரம் கோடி என கூறினீர்கள் ஆனால் எதுவுமே நமக்கு முறையாக இல்லை.
ராமஜெயம் கொலையை கண்டுபிடிக்கவில்லை என்பதில் வியப்பில்லை அவர்களுக்கு தேவை என்றால் கண்டுபிடிப்பார்கள்.
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் கிளை கழகங்களாக அலுவலகங்களாக தான் செயல்படுகிறது ஆட்சியில் இருப்பவர்களின் அலுவலகங்களாக தேர்தல் ஆணையம், கிட்டத்திட்ட நீதிமன்றங்களும் மாறி வருகிறது.
பெரியாரைப் பற்றி பேசினேன் என நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் என்மீது போட்டார்கள். நாம் தமிழர் கொடுக்கும் புகார்களை ஏற்காமல் மற்றவர்கள் கொடுக்கும் புகார்களை ஏற்று வழக்குகள் பதிவு செய்தனர். பல்வேறு இடங்களில் வழக்கு போட்டாலும் ஒரே இடத்தில் விசாரியுங்கள் என நாங்கள் கூறுகிறோம் . அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் வழக்கில் ஒரே இடத்தில் ஏன் விசாரிக்கக் கூடாது என கேட்கிறது. இப்படி கூறியது ஒரே நீதிமன்றம் தான். நாட்டின் மதிப்புமிக்க உயர்ந்த மாண்புமிக்க நீதிமன்றம் இருக்கே அதன் மீதும் நம்பிக்கையை நாங்கள் இழந்து வருகிறோம் என்றார்.
சீ வோட்டர் கருத்து கணிப்பு கடந்த காலங்களில் அவர்கள் எப்படி கருத்துக்கணிப்பு நடத்தினார்கள் என்பதை பார்க்க வேண்டும்.
நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பல தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டுள்ளோம் இம்முறையும் போட்டியிட உள்ளோம். எங்களை அந்த கயுத்துக்கணிப்பில் அவர்கள் சேர்க்கவில்லை. இதிலிருந்து அந்த கருத்துக்கணிப்பின் நேர்மை தெரியவில்லையா என்றார். என் கட்சி பெயர் எங்கே… நீ கருத்து கணிப்பு நடத்துகிறாயா அல்லது கருத்தை திணிக்கிறாயா?
இவ்வளவு ஊடகங்கள் இருக்கின்றீர்கள் தேர்தல் நேரத்தில் நாங்கள் போட்டியிடுவோம் என்பதையே நீங்கள் கூற மாட்டீர்கள் மற்றவை என்பதில் தான் நாம் தமிழர் கட்சி இடம்பெறும்.
குடிச்சிட்டு பாட்டிலை திருப்பி கொடுத்தால் 10 ரூபாய் – குடித்துவிட்டு பாடையில் படுத்தால் 10 லட்சம் – இது திராவிட மாடல் பாலிசி.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெகா தனித்து போட்டியிட்டு திமுகவை வீழ்த்துவேன் என்ற விஜய் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்.
நான் பிரபாகரனை போல தனித்தே நின்று போட்டியிடுவேன்.
நான் புலி போன்றவன் தனித்தே நின்று போட்டியிடுவேன். படை சேர்த்துக்கொண்டு தேர்தலை சந்திப்பவன் அல்ல நான்.
கூட்டத்தில் ஒரு ஆளாக போட்டியிட துணிவோ, வீரமோ தேவையில்லை, தனித்து நிற்க தான் துணிவும் வீரமும் தேவை.
நீங்கள் கூட்டணி இல்லாமல் தேர்தலை எப்படி சந்திப்பீர்கள் என்று கேட்கும் நீங்கள் கொள்கை இல்லாமல் எப்படி தேர்தலை சந்திக்கப் போகிறார்கள் அவர்கள் என்று யாரும் கேட்பதில்லையே.
எதிரியை தீர்மானித்து விட்டு தான் களத்தில் இறங்கி உள்ளோம். எந்த குழப்பமும் இல்லை தடுமாற்றமும் இல்லை. இன்னும் சில மாதங்கள் உள்ளது நாங்கள் எங்கே எப்படி தனித்தா இல்லையா என்பது தெரியும்.
நாங்கள் வாங்கப்போவது திமுக, அதிமுக ஓட்டு அல்ல மக்களின் ஓட்டு தான் என தெரிவித்தார்.