தந்தை இறந்த துக்கத்தை அடக்கிக்கொண்டு தேர்வு எழுதிய மாணவி – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆறுதல்.

தமிழ்நாடு #பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின்
திருவெறும்பூர் தொகுதி பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் மாணவி ஷாலினி, அருகே உள்ள தேனேரிப்பட்டி பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். பொதுத்தேர்வு நேரத்தில் இவரது தந்தை சண்முகம் இறந்துவிட்டார். இருப்பினும் அந்த துக்கத்தை மனதில் இருத்திக் கொண்டு மாணவி ஷாலினி பொதுத் தேர்வினை BHEL வளாக பள்ளி மையத்தில் எழுதினார்.

ஆசிரியர்களும் சக மாணவர்களும் அவருக்கு ஆறுதல் கூறி தேர்வை எழுத வைத்தனர். இந்த நிலையில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று மாணவி ஷாலினியின் வீட்டுக்குச் சென்று அவருக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி, தந்தையின் மறைவுக்கு ஆறுதல் கூறினார். உடன் ஒன்றிய கழகச் செயலாளர் கங்காதரன் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருப்பராய்த்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் இல்லையா? கல்வி வணிகமயமாக்கப்படுகிறதா?87 வயது முதியவரின் ரத்தக் கண்ணீர் மனு! “நான் இழந்த கல்வியை… என் ஊர் குழந்தைகள் இழக்கக் கூடாது!” ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்…

    உயிரைக் கொடுத்து… நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள்!செவி சாய்ப்பாரா தமிழக முதல்வர் விஜய் !உடனடி, அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?அமைச்சர் சரத்குமார்

    ராணுவ வீரர்களின் தியாகம்… விலையில்லாச் சொத்து! முப்படைத் தளபதி பதக்க வீரர்களுக்கு தமிழக முழுவதும் கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கக் கோரிக்கை. திருச்சி: நாட்டின் எல்லையில் விழித்திருந்து தாய்நாட்டைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், முப்படைத் தளபதிகளின்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *