
பெரியசாமி – சிறப்பு செய்தியாளர்
திருச்சி திருவெறும்பூர் மார்ச் 31
ரமலான் சிறப்பு தொழுகை….. திருச்சி பாப்பாக்குறிச்சி காட்டூர் பர்மா காலணியில் அமைந்துள்ள ரஹ்மானியா பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தலைமை இமாம் முகமது முஸ்தபா தொழுகை நடத்தி உலக ஒற்றுமை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தார்.தொழுகையில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.
தொழுகை முடிவில் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரமலான் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர். தொழுகையில் பள்ளிவாசல் தலைவர் முஹம்மது ரபிக்செயலாளர் ரபிக் துணைச் செயலாளர்சரிப்பொருளாளர்நூருல் துணைத் தலைவர் தாஜுதீன்ஆலோசகர் எஸ் எஸ் ரஹமத்துல்லா உசேன் அபுபக்கர்மற்றும். நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
