திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் ஜெ. செந்தில்நாதன் தலைமையில் மாநிலத் துணைத் தலைவர் வக்கீல் எம்ராஜேந்திரகுமார் மூத்த வழக்கறிஞர் ராஜேந்திரன் மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் திருச்சி நீதிமன்றம் எதிரே கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் மாநில செயலாளர் கிருபா மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் வனஜா மோகனா விக்னேஷ் சுகன்யா சிவகாமி பெரியசாமி முருகையா நோபல் சந்திரபோஸ் அப்துல் சலாம் சுரேஷ் ஆறுமுகம் அஸ்வின் பிரபு கோகுல் காமராஜ் பழனிச்சாமி ரமணன் அமர்த்தியா சுப்ரமணி சரவணகுமார் பிரியா அசோக்குமார் டேனியல் கார்த்திகா ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. கூட்டணி ஆட்சி தத்துவப்படி தமிழகத்தில் நிறைவடையா இருக்கும் மாநில அரசு சார்ந்த அரசு வழக்கறிஞர் பதவிக்கு காங்கிரஸ் வழக்கறிஞர்களுக்கு முன்னுரிமை வழங்ககோரி தமிழக முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைப்பது.
  2. திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் பொருளாதார குற்றப்பிரிவு, கடனுறுதி தீர்ப்பாயம், போஸ்கோ நீதிமன்றம் ஃ(குழந்தைகளைபாதுகாக்கும் நீதிமன்றம்) போதைப்பொருள் மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் நீதிமன்றம்(EOW,DRT, POCSO,NDPS) ஆகிய நீதிமன்றங்களை கொண்டுவர தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும்.
  3. திருச்சி மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில் கேரள மாநிலம் வயநாடு சென்று தேர்தலில் போட்டியிடும் இளம் தலைவி ப பிரியங்கா காந்தி வெற்றிக்கு பாடுபடுவது.
  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *