250 கோடி ரூபாய் செலவு செய்து திமுக கொண்டாடிய தேர்தல் தீபாவளி- பாஜக செய்தி தொடர்பாளர் தாக்கு

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் அறிக்கை.

250 கோடி ரூபாய் செலவு செய்து திமுக கொண்டாடிய தேர்தல் தீபாவளி

தமிழக முழுக்க 250 கோடி ரூபாய்க்கு மேல் பரிசு பொருட்கள் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கி தீபாவளி பண்டிகையை திராவிட முன்னேற்றக் கழகம் சிறப்பாக கொண்டாடியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், 200 தொகுதிகளிலும் வெற்றி பெற நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்று கூறியதன் அடிப்படையில், சனாதனது தர்மத்தை ஒரு பக்கம் எதிர்த்து பேசிக்கொண்டு, இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் புறக்கணித்து வரும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், திமுக கட்சி நிர்வாகிகளுக்கு தமிழக முழுக்க தீபாவளி பரிசு பொருட்கள் வாரி வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பூத் கமிட்டி இன்சார்ஜ் என்று சொல்லக்கூடிய
பாக முகவர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு
அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய மற்றும் பகுதி செயலாளர்கள்,
மேயர், சேர்மன் முதல் கவுன்சிலர் வரை ஒவ்வொருவரும் தனித்தனியாக,
தீபாவளி பட்டாசு இனிப்புகள், குவாட்டர் முதல் மட்டன்,சிக்கன் கறி பார்சல் வரை அனைத்தையும் அமோகமாக வழங்கி தீபாவளி திருவிழாவிற்கு தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறார்கள்.

இதற்காக அனைவருமே அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு
லோக்கல் ரோடு காண்ட்ராக்டர் முதல் மணல் குவாரி முதலாளிகள், ரியல் எஸ்டேட் மாபியாக்கள்,
தமிழக அரசு டெண்டர் வியாபாரிகள் வரை கலெக்ஷன் செய்து,
வழக்கம்போல இதிலும்
30 சதவீதம் தங்கள் பேமிலி தீபாவளி கொண்டாட்டங்களுக்கு ஒதுக்கி, மீதமுள்ள 70 சதவீதம் தீபாவளி கலெக்சன் தொகையை
கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு பரிசுகளாக பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது

கட்சி தான் குடும்பம் குடும்பம் தான் கட்சி என்று சொல்ல கூடிய தமிழகம் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தன் பங்குக்கு எதுவும் செய்யவில்லை என்று கொளத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளிடையே வருத்தம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து உடனடியாக கொளத்தூர் சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகளுக்கும் தீபாவளி பரிசு பொருட்களை வழங்க வேண்டும்.

திமுகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தீபாவளி பரிசு வழங்கிய போது முதல் ஸ்டாலின் அவர்கள் மட்டும் தன்னுடைய சட்டமன்ற தொகுதியில் திமுக தீபாவளி பரிசு வழங்காதது ஏன்?

மேலும் செக்யூலரிசம் பேசும் தமிழக முதல்வர் அனைத்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதும் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாமலும் புறக்கணிப்பது ஏன்? என்று நேற்று முன்தினம் பாஜக சார்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்களும் முதல் முறையாக தீபாவளிக்கு வாழ்த்துக்கள் சொல்லியிருந்தார்.

தற்போது முதல் முறையாக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் “நம்பிக்கை உள்ளவர்களுக்கு, கொண்டாடுபவர்களுக்கு தீபாவளித் திருநாள் வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று
அவருக்கே உரிய வெறுப்பு அரசியல் பாணியில் உற்சாகம் குறைந்து வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

வாழ்த்துக்கள் என்றாலே உள்ளன்போடு, உயர்ந்த எண்ணத்துடன் பண்டிகைகளை கொண்டாடும் மக்கள் அனைவரையும் இணைக்கும் வகையில், ஜாதி,மத இன, மொழி பாகுபாடு இன்றி உற்சாகப்படுத்தி மகிழ்வித்து வாழ்த்துக்களை பரிமாறுவது தான் தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு,
அரசியல் நாகரிகம் என்பதை துணை முதல்வர் உதயநிதி புரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் அரசியலுக்காக, ஓட்டு அரசியலுக்காக, தன்னுடைய கட்சியின் தொண்டர்களை கட்டிக் காப்பாற்ற, ஏமாற்ற, தீபாவளி பரிசு கொடுத்து உற்சாகப்படுத்த சொல்லி அமைச்சர்களுக்கும் கட்சியினருக்கும் ஒரு பக்கம் கட்டளையிட்டு,
மறுபக்கம் சிறுபான்மையினரை திருப்திப்படுத்த முதல்வரும் துணை முதல்வரும் போடும் நாடகங்கள் இனி தமிழகத்தில் எடுபடாது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,
துணை முதல்வர் உதயநிதிக்கு, இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் எப்படி கூறுவது என்பதை வழிகாட்டும் வகையில்,
முன்னுதாரணமாக, இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லலாமா? என்கிற குழப்பத்தைத் தவிர்த்து முற்போக்குத்தனமாக
எம்மதமும் சம்மதம் என்கிற வழியில் இந்து பண்டிகைகளுக்கு, வரும் காலங்களில் தெளிவாக மகிழ்ச்சியாக உற்சாகத்தோடு வாழ்த்து தெரிவிக்க வேண்டும்.

ஏ.என்.எஸ்.பிரசாத்
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்
கைப்பேசி: 9840170721

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *