பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி? வெறும் 750 ரூபாயில் கெஜட்டிலேயே மாற்றலாம்

பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி? வெறும் 750 ரூபாயில் கெஜட்டிலேயே மாற்றலாம்

பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். வெறும் 750 ரூபாய் கட்டணம் செலுத்தி www.stationeryprinting.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெயரை மாற்றிக்கொள்ள முடியும். அரசு கெஜட்டில் உங்கள் பெயர் மாறிவிடும். இதை ஆவணமாக எங்குவேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம்

பிறப்பு சான்றிதழ்களில் தவறுகளை எளிதாக சரி செய்ய முடியும். பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால், அந்த பிழையை உடனடியாக திருத்திவிடுவது நல்லது.. இதற்கு பிறப்பு பதிவாளரை அல்லது, சுகாதார ஆய்வாளர் அல்லது கிராம நிர்வாக அலுவலர் இவர்களில் யாரையாவது அணுக வேண்டும்.

நீங்கள் உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் பிழையை திருத்த வேண்டும் என்று ஒரு மனுவை விஏஓ அல்லது சுகாதார ஆய்வாளரிடம் தரவேண்டும். பிறகு, குழந்தையின் பெற்றோரின் அடையாள சான்று, மருத்துவமனையில் பிறந்த குழந்தை என்றால் டிஸ்சார்ஜ் சம்மரி போன்றவற்றை இணைத்து தந்தால் போதும். அவைகளை சரிபார்த்து, உங்கள் மனுவையும் ஏற்று, பிழையையும் திருத்தி தருவார்கள். இதை உடனே செய்வது நல்லது.

ஒரு வேளை பெயரை திருத்தாமல் விட்டுவிட்டீர்கள். பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது முழு பெயரையும் மாற்ற வேண்டும் என்றால் அதற்கும் வழிகள் உள்ளது. உங்கள் பெயரை அரசாங்க கெஜட்டில் முழுமையாக மாற்றிக்கொள்ள முடியும். www.stationeryprinting.tn.gov.in என்ற இணையதளத்தில் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து முழு தகவல்கள் இருக்கிறது. அதனை இப்போது பார்ப்போம்..

பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால் (குழந்தை என்றால்) தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். கையொப்பத்தின் கீழ் உறவின் முறையை (Capital Letter-ல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.

மனுதாரர் ஆவணங்களில் சுய சான்றொப்பம் இடவேண்டும். பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. அதற்கான உறுதிமொழியினை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.

பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும். 5. பெயர் மாற்றக் கட்டணம்: ரூ.750/ மட்டும். இணையதள செலுத்துச்சீட்டு மூலமாக மட்டுமே பிரசுரக் கட்டணம் ஏற்கப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் www.karuvoolam.tn.gov.in என்ற வலைதளத்தில் Creation / Payment என்ற Tab-யினை தேர்வு செய்து அவற்றில் நட்சத்திரக் குறியிடப்பட்டுள்ள கலங்களில் கோரியுள்ள தகவல்களை மட்டும் பூர்த்தி செய்து பிரசுரக் கட்டணத்தை வங்கியில் Online / Offline மூலம் செலுத்தி, கட்டணம் செலுத்தப்பட்டதற்கான செலுத்துச்சீட்டினை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

அஞ்சல் மூலம் விண்ணப்பிப்பவர்களிடமிருந்து பிரசுரக் கட்டணம் வங்கி கேட்பு வரைவோலையாகவோ/காசோலையாகவோ/அஞ்சல்

ஆணையாகவோ/பணவிடைத்தாளாகவோ ஏற்கப்படமாட்டாது. 01-07-2023 முதல் இணையதள செலுத்துச்சீட்டு மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

எனவே விண்ணப்பதாரர்கள் www.karuvoolam.tn.gov.in என்ற வலைதளத்தில் Challan Creation | Payment என்ற Tab-யினை தேர்வு செய்து அவற்றில் நட்சத்திரக் குறியிடப்பட்டுள்ள கலங்களில் கோரியுள்ள தகவல்களை மட்டும் பூர்த்தி செய்து பிரசுரக் கட்டணத்தை உரிய வங்கியில் செலுத்தி, கட்டணம் செலுத்தப்பட்டதற்கான செலுத்துச்சீட்டினை தபாலில் பெயர்மாற்ற விண்ணப்ப படிவத்துடன் இணைத்தனுப்புதல் வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி இணையதள செலுத்துச்சீட்டு இத்துறையின் வலைதளத்தில் (www.stationeryprinting.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர் பழைய பெயரில் கையொப்பமிட வேண்டும். விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவு பெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி இணையதள செலுத்துச்சீட்டு இத்துறையின் வலைதளத்தில் (www.stationeryprinting.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அம்மாதிரி இணையதள செலுத்துச்சீட்டின்படி சரியாகப் பூர்த்தி செய்து பிரசுரக் கட்டணம் செலுத்தியவர்களின் செலுத்துச்சீட்டு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

அரசு கிளை அச்சகங்களுக்கான DDO Code கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் அரசு கிளை அச்சகங்களுக்குரிய DDO Code-னை இணையதள செலுத்துச்சீட்டில் சரியாகப் பூர்த்தி செய்தல் வேண்டும்.

சென்னை (PAO Chennai East) – 43011165

மதுரை (PAO Madurai) – 45010118

சேலம் – 15080031

திருச்சிராப்பள்ளி- 14010018

புதுக்கோட்டை-11010024

விருத்தாசலம் (கடலூர் மாவட்டம்) – 02040057

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *