அயலகத்தில் இறந்த தமிழர் – மின்னலாக செயல்பட்டு உதவிய துரை வைகோ எம்.பி

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த அயலகத்தில் வேலை செய்து வந்த .தேவராஜ் வேலு அங்கே திடீரென மரணமடைந்தார்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் துரை வைகோ எம்.பி யை தொடர்பு கொண்டு, உடலை தாயகம் கொண்டு வர உதவுமாறு கேட்டுக்கொண்டனர்.
அவர்களின் வேண்டுகோளை ஏற்று, உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அவர்களின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார் துரை வைகோ.

அதன் தொடர்ச்சியாக, ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் 11.02.2026 அன்று தேவையான அனுமதி (NOC) வழங்கி, உள்ளூர் காவல் அனுமதி, இறுதி வெளியேற்ற அனுமதி, எம்பால்மிங், சரக்கு முன்பதிவு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும், இந்த செயல்முறைகள் முடிவடைந்தவுடன் விமான பயண விவரங்களை குடும்பத்தினருக்கு நேரடியாக தெரிவிப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரது உடலை விரைவாக இந்தியாவிற்கு கொண்டு வர தேவையான அனைத்து உதவிகளையும் தூதரகம் தொடர்ந்து வழங்கும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் துரை வைகோ எம்.பி.

திரு. தேவராஜ் வேலு அவர்களின் குடும்பத்தினரின் துயரத்தில் முழுமையாக பங்கெடுத்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்குவேன் என்று வேலு அவர்களின் குடும்பத்தினரிடம் உறுதியளித்தார் துரை வைகோ எம்.பி .

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    லஞ்ச ரேட் லிஸ்ட்- திருப்பராய்த்துறை மின்சார வாரிய அலுவலகம்.தரிகெட்டு ஓடும் புரோக்கர்கள் – கதறவிடும் கார்த்திகேயன் -AE – ஆதாரங்களைத்தருகிறோம் ஆக்‌ஷனில் இறங்குவாரா அமைச்சர் நிர்மல்குமார்?

    தமிழக முதல்வராக திரு ஜோசப் விஜய் பதவி ஏற்றவுடன் லஞ்சம் வாங்கும் ஊழல் அதிகாரிகளுக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து விட்டது. இதனால் லஞ்சம் முற்றிலும் மறையத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று வாரத்தில் மட்டும் திருப்பராய்த்துறையில் தற்காலிக உதவி மின் பொறியாளராக…

    துரை வைகோ எம்.பி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

    இன்று (22.07.2026) திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளோடு மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை புது தில்லியில் உள்ள அலுவலகத்தில் துரை வைகோ எம்.பி சந்தித்தார். முதலாவதாக, திருச்சிராப்பள்ளியில் உலர் துறைமுகம் (Dry Port…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *