
தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி தனித்தன்மை வாய்ந்த ஒரு தொகுதியாகும். ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக முத்தரையர்கள்,பிராமணர்கள், நாயுடு, நாடார், தேவேந்திர குல வேளாளர், கவுண்டர், உடையார் ஆகியோர் பிரதானமான முக்கிய சாதியை சேர்ந்த மக்கள் ஆவார்கள். இந்த தொகுதி பொது தொகுதியாக அறிவிக்கப்பட்டு 1951இல் நிறுவப்பட்டது. இந்த தொகுதியின் மொத்த மக்கள் தொகை 3.12 லட்சம் ஆகும்.

1952 ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சிற்றம்பலம் முதன்முதலாக வேட்பாளராக வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார். அதன் பிறகு 1957 1962 1967 மற்றும் 1971 ஆகிய சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி வென்றது.
1977 1980 மற்றும் 1984 ஆகிய மூன்று முறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றது. 1989இல் ஜனதா கட்சியை சேர்ந்த தீட்சிதர் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் நுழைந்தார். பிறகு 1991 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது.

1996 இல் முதன்முறையாக திமுக மாயவன் என்கின்ற வேட்பாளரை வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்திற்கு அழைத்துச் சென்றது. அதன் பிறகு2001, 2006, 2011, மற்றும் 2015 இடைத்தேர்தல் ஆகிய நான்கு சட்டமன்றத் தேர்தல்களிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமே ஸ்ரீரங்கத்தை கைப்பற்றியது. 2011 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் தமிழ்நாட்டின் நட்சத்திர தொகுதியாக மாறியது ஆம் 2011 ஆம் ஆண்டு தான் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சர் ஆன செல்வி ஜெ ஜெயலலிதா ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கி ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அன்றைய தினம் ஸ்ரீரங்கம் முதல்வர் தொகுதி என்கின்ற பெயரை பெற்றதோடு அதிகபட்ச பயன்களையும் அடைந்தது. ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு மேல் அவரால் அந்தப் பதவியில் தொடர இயலவில்லை

காரணம் அன்றைக்கு வெளியான ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கில் தீர்ப்பு. அதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு வளர்மதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் வேட்பாளராக இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் வளர்மதி அவர்களை போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். தொடர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரும்புக்கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் 2021 சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வண்ணம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது. அந்த தேர்தலில் போட்டியிட்ட பழனியாண்டி பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி அடைந்ததன் மூலமாக முதன் முதலாக சட்டமன்றத்தை அடைந்தார். இந்தத் தொகுதியின் சிறப்பு என்ன என்று கேட்டால் சாதி பார்த்தோ மதம் பார்த்தோ இனம் மொழிப் பார்த்தோ இந்த தொகுதி மக்கள் வாக்களிப்பதில்லை.

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை பெருவாரியான படித்த மக்களும் பாமர மக்களும் சம விகிதத்தில் கலந்து வாழும் தொகுதி ஆகும். ஸ்ரீரங்கத்தின் பூ சந்தை தமிழக அளவில் பிரசித்தி பெற்ற ஒன்று ஆகும். ஸ்ரீரங்கத்தை சுற்றியுள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களான மணிகண்டம் பாத்திமா நகர் நாகமங்கலம் ஜீயபுரம் மேலூர் ராம்ஜி நகர், இனாம் குளத்தூர் ஆகிய பகுதிகள் மிக மிக முக்கியமான கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகள் ஆகும். ஸ்ரீரங்கம் நகரை பொறுத்தவரை பிராமண மக்களின் ஆதிக்கம் அதிகம். ஆனாலும் கூட ஸ்ரீரங்கம் மக்கள் என்றைக்குமே சாதி பார்த்து வாக்கு அளித்ததில்லை என்பதற்கான அத்தாட்சியை மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்ற வாக்காளர்களில் பட்டியலை பார்த்தால் நன்கு புலப்படும். அந்த வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக களம் இறக்கப்படுபவர் யார் என்கின்ற மில்லியன் டாலர் கேள்வி மக்கள் முன் தோன்றியுள்ளது. குறிப்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளருமான வளர்மதி ஜெயலலிதா இருந்த நாட்களிலேயே தன்னை வேட்பாளராக அவர் அறிமுகப்படுத்தி வெற்றி பெற வைத்தார் என்று கூறி மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கான போட்டியில் களம் இறங்கி இருக்கின்றார். அவரது ஆதரவாளர்கள் மிக வேகமாக ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அவருக்கான களப்பணிகளில் இறங்கி இருக்கின்றார்கள். நன்கு பரிச்சயமான வேட்பாளர் தான் என்றாலும் 2015, 2016 ஆகிய இரு சட்டமன்றத் தேர்தல்களில் அவர் வெற்றி பெற்று இருந்தாலும் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுது தொகுதிப் பக்கம் அதிகம் வரவில்லை தொகுதிக்காக முக்கிய வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தவில்லை என்கின்ற குற்றச்சாட்டுகள் ஆங்காங்கே இருந்து கொண்டு தான் இருக்கின்றது அது அவருக்கு ஒரு பலவீனமாக அமையக்கூடும். அதே வேளையில் ஸ்ரீரங்கம் நகரை வாழ்விடமாக கொண்ட முன்னாள் தமிழ்நாடு அரசு சட்டமன்ற கொறடாவும் கழகத்தின் அமைப்புச் செயலாளராகவும் இருக்கின்ற ஆர் மனோகரன் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் தெளிவாக தெரிகின்றன.

இவரை பொறுத்தவரை மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர் என்பதை விட ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிக மிக நெருக்கமான ஒருவராக அறியப்படுபவர்.
1986, 1996 &2001 உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி பெற்று கோட்டத்தலைவராகவும் திறம்பட மக்கள் பணி ஆற்றியவர்.
குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் மனோகரன் அவர்கள் ஸ்ரீரங்கம் மக்களுக்கு செய்த சேவைகள் என்பது அளவிட முடியாதது ஆகும். பல வகைகளில் பல மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை கொரோனா காலகட்டத்தில் தொடர்ந்து செய்து வந்தார்.

அது மட்டும் அல்லாமல் இவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்று சட்டமன்றத்தில் தலைமை கொறடாவாக பணியாற்றிய காலகட்டத்தில் தன் கட்சியின் உறுப்பினர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நிறைய உதவிகளை செய்துள்ளார். இவரால் பயன்பெற்றவர்கள் ஏராளம் ஏராளம்.் இன்றைக்கும் இவரால் பயன்பெறுபவர்கள் அதிகம். தொகுதி மக்களின் பிரச்சனைகளுக்கு முன் நின்று குரல் கொடுக்கக்கூடிய போராட்ட குணமும் இவரிடம் இயல்பாக உள்ளது. மேலும் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இவரை எளிதில் சந்திக்க முடியும் என்பதும் இவருடைய மிகப்பெரிய பலம் ஆகும். ஒரு வேளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மனோகரனுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் பட்சத்தில் நிச்சயமாக வெற்றிக் கனி என்பது இவருக்கு மிக எளிதாக கிடைக்கும் என்கிறார்கள் ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்த மக்கள்.

அதே நேரத்தில் ஒரு சில ஊடகங்கள் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் பெருமளவில் முத்தரையர் சமூக மக்கள் வசிக்கின்ற காரணத்தினால் வளர்மதி அதே சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எளிதாக வெற்றி பெறுவார் என்று ஆருடம் கூறி வருகிறார்கள். அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாக தான் பார்க்க முடிகிறது. ஆனால் அதே வேளையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தஐ கொறுத்தவரை எம்ஜிஆர், ஜெயலலிதா தொடங்கி இன்றைய பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி வரை எந்தவிதமான சாதி ரீதியிலான அல்லது மத ரீதியிலான பாகுபாடுகளையும் பார்க்காதவர்கள் என்பதும் அனைத்து சாதி மத மக்களையும் ஒன்றாக பாவிப்பவர்கள் என்ற காரணத்தினால் நிச்சயமாக சாதி அடிப்படையில் எடப்பாடியார் வேட்பாளரை தேர்ந்தெடுக்க மாட்டார் என்பது சர்வ நிச்சயம்.

அந்த வகையில் மனோகரன் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. பெருவாரியான மக்களின் ஆதரவு மனோகரனுக்கு இருக்கின்ற பட்சத்தில் நிச்சயமாக மனோகரன் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெல்வார் என்பது சர்வ நிச்சயம்.

ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரும்புக்கோட்டை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிப்பார்களா என்பதை 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் எதிர்பார்க்கலாம்.





