
திருச்சி கிழக்குத் தொகுதியில்
தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரை பொதுக்கூட்டம்.
திருச்சி இ.பி. ரோட்டில் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிழக்குத் தொகுதியில் தமிழ்நாடு தலைகுனியாது பரப்பரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
வரவேற்புரை மாநகரக் கழகச் செயலாளர்
மு.மதிவாணன்
தலைமை ஏற்று சிறப்புரை திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

சிறப்புரை
செய்தி தொடர்பு துணைத் தலைவர் மருது.அழகுராஜ்
கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்.
நன்றியுரை
மலைக்கோட்டை பகுதி கழகச் செயலாளர் R.மோகன்
பொதுக் கூட்டத்தில் தொகுதி பார்வையாளர் கதிரவன் தலைமை செயற்குழு உறுப்பினர் வன்னை அரங்கநாதன், மாநில அணி நிர்வாகி செந்தில், துணை மேயர் திவ்யா, மாவட்ட, மாநகர, பகுதி, வட்டகழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக முன்னோடிகள் மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரை
பிள்ளைகள் படிக்கும் படிப்பில் அரசியல் நடத்துபவர்கள் தான் ஒன்றிய அரசு அதனுடன் துணை போகும் அதிமுக என எடுத்துரைத்தார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்

அடுத்த தேர்தலை மனதில் வைத்து ஆட்சி நடத்துவதை காட்டிலும் அடுத்த தலைமுறை மனதில் வைத்து ஆட்சி நடத்தக்கூடியவர் தான் நமது தமிழக முதல்வர் என்றும் மேலும் இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் 48 எனும் திட்டத்தின் மூலம் மனிதநேயத்தை எடுத்துரைத்தவர் தான் நமது தமிழக முதல்வர் என்றும் ஒருவர் விபத்தின் மூலம் மூளை சாவு ஏற்பட்டால் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்தால் அவருக்கு அரசு மரியாதை என்பதை முதன் முதலில் வழங்கியவர் நமது தமிழக முதல்வர் தான் என்றும் மேலும் எனது மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருப்பது தமிழக முதல்வர் கொண்டு வந்த முத்தான திட்டம் அது எதுவென்றால் அண்ணல் அம்பேத்காரின் பேரில் உருவான உயர்வுக்கு படி என்னும் திட்டம் தான் என்றும்
ஆனால் இந்தத் திட்டத்தை கடந்த அதிமுக அரசில் படித்த மாணவர்கள் எத்தனை பேர் என்றால் இரண்டு பேர் மட்டும் தான் என்றும் நமது தமிழக முதல்வர் ஆட்சியில் கடந்த நாலே முக்கால் ஆண்டு காலத்தில் ஒரு மாணவருக்கு 35 லட்சம் செலவு செய்து வெளிநாட்டில் அவர்களை படிக்க வைத்து இதுவரை 386 மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதற்கு காரணம் நமது தமிழக முதல்வர் தான் என்றும் இதற்காக தமிழக அரசு 180 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது என்றும் இதை செலவு என்று தமிழக முதல்வர் பார்க்காமல் முதலீடு என்று பார்த்து வருவதாகவும் எடுத்துரைத்தார்

மேலும் மாணவர்களுக்கு கல்வியானது எளிதாக கிடைத்துவிடவில்லை என்றும் கடந்த 200 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு தான் நமது பிள்ளைகள் பள்ளிகளுக்கு சென்று கல்வி கற்று வருவதாகவும் இதற்கு காரணம் அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியார் கலைஞர் தற்போது உள்ள தமிழக முதல்வர் ஆகியோர்தான் காரணம் என்றும்,

மேலும் தந்தை செய்த தொழிலை மகன் செய்ய வேண்டும் என்ற நிலையை மாற்றிய அரசு திராவிட மாடல் அரசு தான் என்றும் 1938 ஆம் ஆண்டு என்ன புரட்சி ஏற்பட்டதோ அந்த புரட்சி தான் தற்போது வரை தமிழகத்தில் நிலவி வருவதாகவும் மேலும் மத நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் ஆட்சியாக இந்த அரசு திகழ்ந்து வருவதாகவும்

மேலும் ஜல்ஜீவன் திட்டத்தை சிறப்பாக நடத்தி வருவது தமிழகம் தான் என பெருமையோடு கூறுவது ஒன்றிய அரசு தான் என்றும் ஆனால் அதற்குரிய 312 கோடி நிதியை தான் ஒன்றிய அரசு வழங்க மறுப்பதாகவும், மேலும் கடந்த இரண்டு வருடமாக கல்விக்கான நிதி 3548 கோடியை நிறுத்தி வைத்திருப்பதும் இதே ஒன்றிய அரசுதான் என்றும், ஆனால் அதே ஒன்றிய அரசுடன் கூட்டணி வைத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தமிழக அரசை வசைப்பாடி அரசியல் நடத்திவருவதாகவும் எடுத்துரைத்தார், மேலும் ஒன்றிய அரசு நமக்கு வழங்க வேண்டிய அனைத்து நிதிகளையும் வழங்கினாலே நமது தமிழகம் முன்னேற்ற பாதையில் தான் செல்லும் என்றும் அனைத்து நலத்திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்றும் ஜூன் மாதம் மகளிருக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார் ஆனால் ஒன்றிய அரசு முழு நிதியையும் வழங்கினால் தற்போது அந்தத் தொகையை நாம் வழங்க முடியும் எனவும் எடுத்துரைத்தார்,
இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் எங்கெல்லாம் பாஜக அரசு ஆட்சியில் அமர முடியும் ஆனால் தமிழக மக்கள் ஒரு பொழுதும் இங்கு இடம் அளிக்க மாட்டார்கள் என உணர்த்துவார்கள் ஏனென்றால் இந்த மண் தந்தை பெரியாரால் பண்படுத்தப்பட்ட மண் என்றும் பேரறிஞர் அண்ணாவால் கலைஞரால் தமிழக முதல்வரால் உருவாக்கப்பட்ட மண்ணாக தமிழ்நாடு திகழ்ந்து வருவதாக எடுத்துரைத்தார்






