வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட இளைஞர்களுடன் துரை வைகோ எம்.பி சந்திப்பு – தங்கள் குடும்பத்தின் தலைமகன் துரை வைகோ என பெற்றோர் உணர்ச்சி பொங்க கண்ணீர்

விருதுநகர் மாவட்டம், சிப்பிப்பாறை கிராமத்தைச் சேர்ந்த மதன்ராஜ், தூத்துக்குடி மாவட்டம், பெரியசாமி நகர் பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் மற்றும் சித்திரை செல்வகுமார் ஆகிய மூன்று தமிழ் இளைஞர்கள், துரை வைகோ வினுடைய முயற்சியால் மியான்மரில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டு இந்தியா திரும்பி வந்துள்ளனர்.

அவர்களின் குடும்பத்தினரின் அழைப்பின் பேரில், இன்று (19.02.2026) முதலில் மதன்ராஜின் சொந்த ஊரான சிப்பிப்பாறை கிராமத்திற்கு துரை வைகோ சென்றார்.

அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பெருந்திரளாக பங்கேற்று வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து,
நவீன்குமார் மற்றும் சித்திரை செல்வகுமாரின் சொந்த ஊரான தூத்துக்குடி பெரியசாமி நகர் பகுதிக்கு இன்று மாலை 5.30 மணிக்கு நேரில் சென்றார்.

அங்கும் அவர்களின் குடும்பத்தினரும் பொதுமக்களும் உணர்ச்சிப் பெருக்குடன் அவரை வரவேற்றனர்.

இந்த மூன்று இளைஞர்களும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டு, மியான்மருக்கு கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளானது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.

01.11.2025 அன்று, அவர்களின் பெற்றோர் துரை வைகோ வின் திருச்சி அலுவலகத்தில் சந்தித்து உதவி கேட்டு கதறி அழுதது காண்போர் மனதை கலங்கச்செய்தது.

உடனடியாக இந்த விவகாரத்தை அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்
எஸ். ஜெய்சங்கர் அவர்களிடம் மனு அளித்து தொடர்ந்து முயற்சி செய்தார் துரை வைகோ எம்.பி.

அவரின் தொடர் முயற்சிகளாலும், மத்திய அரசின் நடவடிக்கைகளாலும், அந்த மூன்று இளைஞர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இந்தியா திரும்பி வந்தனர்.

27.01.2026 அன்று, அவர்கள் பெற்றோருடன் திருச்சி பாராளுமன்ற தொகுதி அலுவலகத்தில் துரை வைகோ வை நேரில் சந்தித்தபோது, அவர்கள் அடைந்த மகிழ்ச்சியால்
காண்போர் மனம் நிறைவடைந்தது.

நன்றி தெரிவிக்க வந்த போதே தங்களின் வாழ்வாதாரத்திற்கு வேலை ஒன்று பெற்றுத் தந்து உதவுமாறு கோரினர்

அவர்களின் வாழ்க்கை மீண்டும் நல்ல முறையில் தொடங்க வேண்டும் என்பதற்காக, சென்னையில் உள்ள முன்னணி தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்து, அதற்கான நியமன ஆணைகளையும் அவர்களிடம் வழங்கினார் துரை வைகோ எம்.பி.

பல மாதங்களாக துயரத்தில் இருந்த குடும்பங்களின் புன்னகையை இன்று நேரில் காண முடிந்தது. அது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளிப்பதாக கூறினார் துரை வைகோ எம்.பி.

இத்தகைய மனிதக் கடத்தல் மோசடிகளில் யாரும் சிக்கிக் கொள்ளாதபடி, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்து அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று அங்கிருந்த இளைஞர்களிடமும்,
செய்தியாளர்கள் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களையும் அவர்களின் பெற்றோர்களையும்
கேட்டுக் கொண்டார் துரை வைகோ எம்.பி.

துயரில் வாடிய குடும்பத்திற்கு ஆறுதலாய் அமைந்தது தன் பணி என்பதில் மன நிறைவு கொள்வதாக நம்மிடையே கூறினார் துரை வைகோ எம்.பி்.

மேலும் மீட்கப்பட்ட இளைஇளைஞர்களின் பெற்றோர் செய்தியாளர்களிடையே பேசுகையில்…..

எங்கள் குடும்பத்தின் தலைமகன் போல எங்கள் பிள்ளைகளை மீட்க அரும்பாடுபட்டார் துரை வைகோ. நாங்கள் பெறாமல் பெற்ற பிள்ளையாக எங்கள் குடும்பத்தின் தலைமகனாக அவள் பார்க்கின்றோம் என உணர்ச்சி பொங்க கூறினர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சி – கரூர் புதிய தடத்தில் பசுமை சாலை & திருச்சி வடக்கு வட்ட சாலை திட்டங்களுக்கு புதிய திட்ட மதிப்பீடு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது! துரை வைகோ எம்.பி கோரிக்கை ஏற்பு!

    திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தற்போதைய திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளது. மேலும், ஒருபுறம் காவிரி ஆறும் மறுபுறம் ரயில்வே இருப்புப் பாதையும் இருப்பதால், இந்த சாலையை அகலப்படுத்துவது சாத்தியமற்ற நிலை…

    சஞ்சீவி நகர், Y Junction, மாருதி நகர் — 16 ஆண்டுகளாக நீடித்த போக்குவரத்து ஒழுங்கின்மைகளுக்கு தீர்வு! ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது!

    திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை 38ல், G Corner மட்டுமல்லாமல் இதே சாலையில், பல உயிர் பலிகள் ஏற்பட்டு வந்த மற்ற முக்கிய கருப்பு மையங்களான (Black Spots) சஞ்சீவி நகர், Y Junction…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *