பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களுக்கு ஏழை விதவைத்தாயின் கண்ணீர் கோரிக்கை

மதிப்பிற்குரிய எங்கள் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களுக்கு வணக்கம்.

மக்களுக்காக களத்தில் நின்று பல நல்ல பணிகள் செய்து வருகிறீர்கள் தயவு செய்து இதற்கும் ஒரு தீர்வு கண்டு தாருங்கள்.

சாவதற்குள் மின்சார இணைப்பு பெற்று நிம்மதியாக சாவதற்கு 76வயதான விதவை மூதாட்டியின் கோரிக்கை

எங்களுக்கு மின்சார வசதி மட்டுமாவது தற்காலிகமாக பெற்றுத் தாருங்கள். இதற்கு மின்சார வாரிய சட்டத்தில் இடம் இருக்கிறது. மின்சாரம் என்பது அடிப்படை உரிமை என்று நமது பல நீதிமன்றங்களும் உத்தரவு போட்டுள்ளன. எங்களது மனுவை என்ஓசி கேட்டு நிராகரிப்பதிலேயே மின்சார வாரியம் குறியாக இருக்கிறது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை கிராமத்தில் உள்ள நந்தவனம் என்ற இடத்தில் கடந்த 16 வருடமாக எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி வாழ்ந்து வருகிறோம்.

இது சம்பந்தமாக தங்களிடம் மனு கொடுத்தம் தாங்களும் நடவடிக்கை எடுத்தீர்கள். ஆனால் மாநில நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. தற்போது எங்களது வேண்டுகோள் என்னவென்றால் தயவு செய்து எங்களுக்கு மின்சாரம் மட்டுமாவது பெற்றுத் தாருங்கள்

செண்பகவல்லி, வயது76
நந்தவனம் திருப்பராய்த்துறை
Mobile – 75029 70096

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சியில் கிரடாய் பேர்புரோ கண்காட்சி; அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்தார் – 48 அரங்குகளில் வீடுகள், மனைகள் காட்சிப்படுத்தல்!

    திருச்சியில் கிரடாய் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் மற்றும் வீட்டுமனைகள் தொடர்பான பேர்புரோ – 2026 விற்பனை கண்காட்சி இன்று தொடங்கியது. திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சி, நாளை மறுநாள் வரை தொடர்ந்து 3…

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *