சௌராஷ்ட்ரா சங்க பரிசளிப்பு விழா

திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற மகளீர்களுக்கு சமையல் போட்டி, கோலப்போட்டி மற்றும் பள்ளி மாணாகர்களுக்கு நடைபெற்ற ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று 22.02.2026 மாலை 6:30 மணியளவில் சின்ன சௌராஷ்ட்ரா தெருவில் உள்ள சிந்தி சேட்டு கோவிலில் சங்க தலைவர் திரு. J. J. மகேஷ் அவர்கள் தலைமையில் சங்க செயலாளர் C. R. அம்சராம் வரவேற்புரை ஆற்ற சங்க துணைத்தலைவர்கள், S. D. முரளிதரன், B. S. ராமபிரசாத், S. S. வினோத், துணைச்செயலாளர்கள் P. J. வெங்கடேசன், K. ராமன் முன்னிலை வகிக்க. சிறப்பு விருந்தினராக சங்க சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திரு. A. S. சுதர்சன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி பரிசுகள் வழங்கினார் . மேலும் இவவிழாவில் சமூக பெரியோர்கள் திரு. K. V. வராதச்சாரி,திரு K. K. கோவிந்தன், திரு. C. R. உமாபதி, திரு N. R. சஹஸ்ரநாமன்,பேராசிரியர் V. S. ரெங்கநாதன், B. R. ஜெயகுமார், A. J.பெருமாள், M. D. ராம்குமார், திரு.VSR. கோபிநாத்,திரு B. R. ராஜன்,திரு A. D.அசோக் குமார், K. N. ராஜேந்திரன்,A. S. செந்தில், B. K. சரவணன், J. K. மதன், K. P. கண்ணன் ஆகியோர் போட்டியில் கலந்து கொண்ட 179 மகளிர்களுக்கும்,63 பள்ளி மணாகர்களுக்கும் பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்க இயக்குனர்கள் M. K. சீனிவாசன், V.R. தினேஷ், V. G. மணிமாறன் ஆகியோர் செய்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக சங்க பொருளாளர் S. S. ஹரிஹரன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சியில் கிரடாய் பேர்புரோ கண்காட்சி; அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்தார் – 48 அரங்குகளில் வீடுகள், மனைகள் காட்சிப்படுத்தல்!

    திருச்சியில் கிரடாய் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் மற்றும் வீட்டுமனைகள் தொடர்பான பேர்புரோ – 2026 விற்பனை கண்காட்சி இன்று தொடங்கியது. திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சி, நாளை மறுநாள் வரை தொடர்ந்து 3…

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *