சஞ்சீவி நகர், Y Junction, மாருதி நகர் — 16 ஆண்டுகளாக நீடித்த போக்குவரத்து ஒழுங்கின்மைகளுக்கு தீர்வு! ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது!

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை 38ல், G Corner மட்டுமல்லாமல் இதே சாலையில், பல உயிர் பலிகள் ஏற்பட்டு வந்த மற்ற முக்கிய கருப்பு மையங்களான (Black Spots) சஞ்சீவி நகர், Y Junction மற்றும் மாருதி நகர் பகுதிகளிலும் Vehicular Underpass அமைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த 14.03.2026 அன்று நான்கு திட்டங்களுக்கும் சேர்த்து சுமார் ₹ 205 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி (Tender) கோரியுள்ளது.

இது தொடர்பாக கடந்த 10.11.2025 அன்று இந்த திட்டத்தின் நிலை தொடர்பாக தகவல் அளிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி திட்ட இயக்குநர் அவர்களுக்கு கடிதம் எழுதினார் துரை வைகோ எம்.பி. அதற்கு பதிலளிக்கும் வகையில் 24.11.2025 அன்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் கொடுக்கப்பட்ட தகவலில் திட்டம் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டும் திட்ட மதிப்பீடு உட்பட அனைத்தும் முடிக்கப்பட்டு டெண்டர் நடைமுறை அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது, இது தொடர்பாக கடந்த 24.01.2026 அன்று மாண்புமிகு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்களுக்கு மின்னஞ்சல் வழியாகவும், 06.02.2026 அன்று மாண்புமிகு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் திரு. ஹர்ஷ் மல்ஹோத்ரா அவர்களை நேரில் சந்தித்து மூன்று மாதங்களாக இந்த நிலையே நீடிப்பதாக எடுத்துக் கூறி டெண்டர் அறிவிப்பை விரைவு படுத்தி வெளியிட கேட்டு கொண்டார் துரை வைகோ. அதை தொடர்ந்து தற்போது டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

G Corner மட்டும் அல்லாது, சஞ்சீவி நகர், Y Junction மற்றும் மாருதி நகர் பகுதிகளில் நீண்டநாளாக நிலவி வந்த போக்குவரத்து பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு, இந்த விவகாரம் குறித்து ஒவ்வொரு முறையும் மாண்புமிகு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் இத்துறையின் மாண்புமிகு இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆகியோரை நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார் துரை வைகோ எம்.பி. அவரது இந்த தொடர் முயற்சியின் பலனாக இந்த முக்கிய முன்னேற்றத்தை பார்க்கிறோம்.

மாண்புமிகு அமைச்சர்களுக்கும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரிகளுக்கும் இத்தருணத்தில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாக துரை வைகோ எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

திருச்சி மக்கள் என் மக்கள். அவர்களின் பாதுகாப்பும் நலனும் எனது முதன்மை பொறுப்பு என்கிற அவரின் முழக்கம் ஒவ்வொரு செயலிலும் நிரூபணம் ஆகி வருகின்றது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    பல்வேறு கோரிக்கைகளோடு இரயில்வே பொது மேலாளரை சந்தித்த துரை வைகோ எம்.பி

    இன்று (21.08.2026) மாலை 5.30 மணி அளவில் திருச்சியில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் (DRM – Trichy) அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சி மக்களின் சார்பில் பல்வேறு முக்கிய ரயில்வே கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார் துரை வைகோ…

    லஞ்ச ரேட் லிஸ்ட்- திருப்பராய்த்துறை மின்சார வாரிய அலுவலகம்.தரிகெட்டு ஓடும் புரோக்கர்கள் – கதறவிடும் கார்த்திகேயன் -AE – ஆதாரங்களைத்தருகிறோம் ஆக்‌ஷனில் இறங்குவாரா அமைச்சர் நிர்மல்குமார்?

    தமிழக முதல்வராக திரு ஜோசப் விஜய் பதவி ஏற்றவுடன் லஞ்சம் வாங்கும் ஊழல் அதிகாரிகளுக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து விட்டது. இதனால் லஞ்சம் முற்றிலும் மறையத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று வாரத்தில் மட்டும் திருப்பராய்த்துறையில் தற்காலிக உதவி மின் பொறியாளராக…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *