முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு குவியும் பாராட்டுக்கள்: அதிரடி காட்டும் புஸ்சி ஆனந்த் – 82 ஆண்டு வரி ஏய்ப்பு முடிவுக்கு வருகிறது

.

விடியலை நோக்கி திருப்பராய்த்துறை ஊராட்சி!
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே தணிக்கை அறிக்கையில் வரி வசூலிக்க அறிவுறுத்தப்பட்டும், திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை ஊராட்சியில், ராமகிருஷ்ண தபோவனத்திற்குச் சொந்தமான நிறுவனங்களிடம் கடந்த 82 ஆண்டுகளாக எந்தவித வரி வசூலும் செய்யப்படவில்லை.அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்ற முதலே அதிகாரிகளுக்கு ஃப்ரீ ஹேண்ட் கொடுத்துள்ளார். யார் வந்தாலும்,யார் முன்னே நின்றாலும் சட்டப்படி நியாயமான முறைப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவு. அதன் விளைவு தமிழக முழுவதும் தெரியத் தொடங்கியுள்ளது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருக்கும் புஸ்சி ஆனந்து அவர்களும் இதற்கு ஏற்றார் போல் தனது துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரியவருகிறது

82 ஆண்டு வரி ஏய்ப்பு: விடியலை நோக்கி திருப்பராய்த்துறை! அதிரடி காட்டும் அண்ணாதுரைக்கு குவியும் பாராட்டுக்கள்.
திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை ஊராட்சியில், ராமகிருஷ்ண தபோவனத்திற்குச் சொந்தமான நிறுவனங்களிடம் கடந்த 82 ஆண்டுகளாக எந்தவித வரி வசூலும் செய்யப்படவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

வரி என்பது கடமை
“வரி ஏய்ப்பு என்பது தேசத் துரோகம்” என்பார்கள். நாட்டின் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் ஒவ்வொரு குடிமகனும் வரி செலுத்துவது அவசியம். இதைப் போற்றும் வகையில் வள்ளுவர்,

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.”

அதாவது, ஒரு அரசு வரி வசூலித்து, அதைப் பாதுகாத்து, பொதுமக்களின் வளர்ச்சிக்குச் சரியாகப் பயன்படுத்துவதே சிறந்த ஆட்சி என்பதை உணர்த்துகிறார். ஆனால், இங்கே 82 ஆண்டுகளாக வரி வசூலிக்கப்படாமல் இருந்தது நிர்வாகத்தின் மெத்தனத்தையே காட்டுகிறது.

எதுகை, மோனை சொல்லும் உண்மை
தபோவனம் அறநெறி பேசும் இடம்; ஆனால், வரி வசூலிக்க தவறியது ஊராட்சி நிர்வாகத்தின் கேடு.
அள்ளி அள்ளி தரும் தபோவனம்; ஆனால், வரி கேட்க துப்பில்லாத பஞ்சாயத்து!

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே தணிக்கை அறிக்கையில் வரி வசூலிக்க அறிவுறுத்தப்பட்டும், அப்போதைய ஊராட்சி மன்றத் தலைவர் பிரகாசமூர்த்தியும், 30 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் பஞ்சாயத்து செயலர் சேகரும் இதை மறைத்தது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிரடி உத்தரவு
இந்த முறைகேடுகளைத் தொடர்ந்து, தற்போது களமிறங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, தபோவனத்தின் கல்வி நிறுவனங்கள், தொழில் பிரிவுகள், பண்ணைகள் மற்றும் குடியிருப்புகள் என அனைத்து இடங்களுக்கும் முறையான நோட்டீஸ் அனுப்பி வரி வசூலிக்கப் பஞ்சாயத்து செயலருக்கு உத்தரவிட்டுள்ளார். இவரின் இந்த நேர்மையான நடவடிக்கைக்குப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அரசுக்கு கோரிக்கை
“மாமன்மச்சான்” முன்னாள் ஊராட்சி தலைவர் பிரகாசமூர்த்தி மற்றும் செயலர் சேகர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 30 ஆண்டுகளாக ஒரே ஊராட்சியில் கோலோச்சும் செயலரை உடனடியாக வேறு மாவட்டத்திற்குப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரி செலுத்துவோம், வளம் சேர்ப்போம்!
நாட்டின் வளர்ச்சிக்கு வரி அவசியம் என்பதை உணர்ந்து, ராமகிருஷ்ண தபோவனம் போன்ற பெரிய நிறுவனங்கள் உடனடியாக வரியைச் செலுத்தி, அரசுக்குத் துணையாக நிற்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருப்பராய்த்துறை சிவன் கோயில் செயல் அலுவலர் பிரபாகரனைக் கண்டு கொலை நடுங்கும் ராமகிருஷ்ண தபோவன சுவாமிகள். காரணம் என்ன? அதிர்ச்சி ரிப்போர்ட். ராமகிருஷ்ண தபோவன ஃபைல்ஸ் 1/22 , உபயம்:RTI

    திருவாசகம்:”நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!” திருப்பராய்த்துறை திருக்கோயிலில் பல ஆண்டுகளாக திட்டமிட்டு பதுக்கப்பட்டிருந்த, அமைதியாக கிடந்த கோப்புகள், ஒரு அதிகாரியின் வருகையால் உயிர் பெற்றதாகக் கூறப்படுகிறது. செயல் அலுவலர் பிரபாகரன் பொறுப்பேற்ற…

    சாமியார்களா குண்டர்களா? ஆசிரியர்களா கூலிப்படையா?நேர்மையான மக்களின் மனம் கவர்ந்த TVK ஆட்சிக்கு அவப்பெயரை உருவாக்க சதியா!

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை கிராமத்தில் உள்ள சிவன் கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கூலிப் படைகளால், குண்டர்களால் திறக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் காலையில் கல்லான சிவபெருமான் முன்னே, பள்ளி குழந்தைகள் முன்னே, பெற்றோர்கள் முன்னே, பொதுமக்கள் முன்னே, சிவன்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *