திருச்சி கிழக்கு தொகுதிஅதிமுக வேட்பாளர் கல்வி நிறுவனத்தில் ஐடி ரெய்டு

திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜசேகருக்கு சொந்தமான கல்வி நிறு​வனத்​தில் வரு​மான வரித்துறை​யினர் சோதனை நடத்​தினர்.

திருச்​சி-மதுரை தேசிய நெடுஞ்​சாலை​யில் மணி​கண்​டம் அருகே திருச்சி கிழக்கு தொகு​தி​யில் போட்​டி​யிடும் அதி​முக வேட்​பாளர் ராஜசேகரன் நடத்தி வரும் இந்திரா கணேசன் கல்வி நிறு​வனத்​தில் வரு​மானவரித் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர்.

அதிமுக வேட்பாளர் நடத்தி வரும் கல்வி நிறு​வனத்​துக்கு நேற்று மாலை 2 கார்​களில் வந்த அதி​காரி​கள் விடிய விடிய சோதனை நடத்தினர்.

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் ராஜசேகரன் தனது பிரச்சார பயணத்தில் இருக்கும் பொழுது இந்த அதிரடி சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கல்லூரியில் பணியாற்றும் பலரது வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் வரவு வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியதாகவும் பேசப்படுகிறது.

தேர்தலில் பணப்பட்டுவாடாவுக்கு ஏதும் பணம் பதுக்கல் அங்கு இருக்கலாம் என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் இந்த சோதனையை நடத்தியதாக கூறப்படுகிறது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சியில் கிரடாய் பேர்புரோ கண்காட்சி; அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்தார் – 48 அரங்குகளில் வீடுகள், மனைகள் காட்சிப்படுத்தல்!

    திருச்சியில் கிரடாய் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் மற்றும் வீட்டுமனைகள் தொடர்பான பேர்புரோ – 2026 விற்பனை கண்காட்சி இன்று தொடங்கியது. திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சி, நாளை மறுநாள் வரை தொடர்ந்து 3…

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *