ஸ்ரீரங்கம் தொகுதியில்அ.தி.மு.க. வேட்பாளர் ஆர். மனோகரனுக்குசெல்லும் இடமெல்லாம் மக்கள் அமோக ஆதரவு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு


திருச்சி ஏப்.10-
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்
ஆர். மனோகரன் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கிராமம் கிராமமாக சென்று, வீதி வீதியாக வீடு வீடாக வாக்கு சேகரித்து வருகிறார்.


இவருக்கு செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் அமோக ஆதரவை அளித்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தபோது தொகுதி பொறுப்பாளராக இருந்து தொகுதி முழுவதும் மக்கள் நலத் திட்டங்களை கொண்டு போய் சேர்த்தவர் என்பதால் மக்கள் உற்சாக வரவேற்பு அவருக்கு அளிக்கின்றனர்.


அந்த வகையில் மணிகண்டம் தெற்கு ஒன்றியம் ஆலந்தூர் செவல்பட்டி தென்றல் நகர் சூரைக்குடிபட்டி சந்தானத்தான்குறிச்சி கோடாங்கி பட்டி குள்ளம்பட்டி பாத்திமா நகர் செவ்வந்திான் பட்டி ஐயன்தோப்பு கொட்டப்பட்டு துறைக்குடி குலவாய்ப்பட்டி கொழுக்கட்டை குடி முள்ளிப்பட்டி திருமலை சமுத்திரம் ஓலையூர் பாலன் நகர் ஆகிய பகுதிகளில் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்காளர்கள் மத்தியில் ஆர் மனோகரன் பேசும் போது,

இந்நிகழ்ச்சியில் மணிகண்டம் தெற்கு ஒன்றியம் செயலாளர் எஸ் பி முத்துகருப்பன், மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் புல்லட் ஜான், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து , ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் மத்திய அரசு நலப்பிரிவு மாநில செயலாளர் எம் பி முரளிதரன், அதிமுக


மாவட்ட பொருளாளர் சேவியர்,
மாவட்ட மீனவர் அணி செயலாளர் கண்ணதாசன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் கேடி தனபால், பாசறை சோனா விவேக்,முன்னாள் அரசு வழக்கறிஞர் வழக்கறிஞர் அணி வெங்கடேசன்,


ஸ்ரீரங்கம் பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எம். பி. பாஸ்கர்,
சாத்தனூர் வாசு மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட சார்பணி செயலாளர்கள் நிர்வாகிகள் உட்பட பலர் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்…

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    முக்கொம்பில் தீயணைப்பு நிலையம்! பல மாமாங்கக் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி – அமைச்சர் ரமேஷ் அதிரடி

    திருச்சி: திருச்சி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான முக்கொம்பில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதனால், முக்கொம்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வந்த அவசரகால பாதுகாப்புக் குறைபாட்டுக்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு…

    நூற்றுக்கால் மண்டபத்தில் நர்சரி… குழந்தைகளின் உயிருடன் யார் விளையாடினார்கள்? “ஆயிரம் ஆண்டு கோவில்… அனுமதியில்லா பள்ளி… யார் கொடுத்த தைரியம்?”

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், வழிபாட்டு மரபின் சின்னமாக இல்லாமல், பல ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிய மழலையர் பள்ளியின் வகுப்பறையாக மாற்றப்பட்டிருந்தது கல்வித்துறையின் ஆய்வில் வெளிச்சத்துக்கு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *