
சமூக ஆர்வலர் அல்லூர் திருவேங்கடம் மாநகராட்சி ஆணையர் மற்றும் முதல்வர் தனிப்பிரிவிற்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். அதன் விவரம் கீழே……
அனுப்புனர்
அல்லூர் ஆர் திருவேங்கடம்
1/1Aமேலத்தெரு
அல்லூர் அஞ்சல்
அல்லூர்
திருச்சி மாவட்டம்
9597683714
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கும் வணக்கம்
கீழ்காணும் கருத்துக்கள் தவறாக இருந்தால் நிராகரிக்கலாம் ஐயா
கருத்துக்கள் திருச்சி மாவட்டம் முழுவதும்
தமிழக அரசுக்கு நன்றி
வாழ்த்து செய்திகள் அறிவிப்புகள் நோட்டீஸ்கள் ஒட்டுவதற்கு
பொதுவான இடத்தை மாநகராட்சி ஒதுக்கியதற்கு மிகுந்த வரவேற்பு பெற்றது மக்கள் மத்தியில்
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த காலங்களில் ப்ளக்ஸ் வைப்பதும் பேனர் வைப்பதும் பதாகைகள் வைப்பதையும் தடுக்க முடியாது
இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்றுள்ள இந்த கட்டவுட் பேனர் இதர விளம்பர பதாகைகள் கலாச்சாரம் பெருகி வருகின்ற சூழ்நிலையில் அதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்
ஆனால் அதை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பதை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் மிகவும் வருத்தமாக இருக்கிறது
தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பொது அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது அந்த இடங்களில் நோட்டீஸ் ஒட்டவும் வாழ்த்துக்கள் தெரிவிப்பற்கும் பயனளிக்கக் கூடிய வகையில் தமிழக அரசு கொண்டு வந்த இந்த செயலுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு அளித்தனர்
ஆனால் பொதுமக்கள் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் முறையாக அதை பயன்படுத்தவில்லை
அதைப்போல் கட்டவுட் பேனர் அனைத்து விதமான விளம்பர பதாகைகள் வைப்பதற்கு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்க வேண்டும்
சாலைகளின் ஓரத்தில் அமைப்பதற்கு தடை செய்ய வேண்டும்
மேலும் மாநகராட்சி அனுமதி பெற்ற பிறகுதான் பிளக்ஸ் விளம்பர பதாகைகள் வாழ்த்து பதாகைகள் வைக்க வேண்டும்
மேலும் அந்த குறிப்பிட்ட பதாகைகளில் அனுமதி பெற்று விவரத்தை தெரிவித்திருக்க வேண்டும்
வரும் காலங்களில் இதன் மூலமாக எந்தவித அசம்பாவித செயலும் நடக்காமல் இருக்க எனது கருத்துக்களை தெரிவிக்கிறேன் ஐயா
மேர்கூறிய கருத்துகள் தவறாக இருந்தால் நிராகரிகலாம் ஐயா
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
