நடிகை கஸ்தூரியின் தெலுங்கு மக்கள் தொடர்பான பேச்சிற்கு பாஜக தமிழக செய்தி தொடர்பாளர் கண்டனம்

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை

கட்டுச் சோறுக்காக, காசு பணத்திற்காக, விளம்பர கூத்துக்கு பொய் மூட்டைகளை சுமக்க வேண்டாம்

தமிழகத்தில் சமீப காலமாக, தமிழக மக்களின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், சமத்துவத்தையும் சகோதரத்தையும், அமைதியையும் சீர்குலைக்கும் விதமாக, ஒரு சில இயக்கங்களும், தனி பின் நபர்களும் விளம்பர அரசியலுக்காக கீழ்த்தரமாக, வரலாற்றுக்கு உண்மைக்கு புறம்பாக தங்கள் விருப்பம் போல் சித்தரித்து பேசுவது அதிகமாகி வருகிறது.

குறிப்பாக இந்து மதம் இந்து கடவுள்கள், இந்திய மொழிகள், இந்திய வரலாறு அனைத்திலும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை திரித்து பேசி, இந்திய மக்களுக்கிடையே பல்வேறு வகையான பிரித்தாலும் சூழ்ச்சிகளை கையாண்டு வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்தியா மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டாலும், அனைவரும் தங்கள் தாய் மொழியை நேசித்து இல்லங்களில் பேசி மகிழ்கின்றனர். சமூக முன்னேற்றம், பண்டைய மன்னர் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட இடமாற்றம் மற்றும் பொருளாதார சூழ்நிலையின் காரணமாக தற்போது பல்வேறு மாநிலங்களில் பல நூற்றாண்டு காலகமாக வசித்து வந்தாலும், தாங்கள் எந்த மாநிலங்களில் வசிக்கிறார்களோ அந்த மாநில மக்களாகவே தங்களை மகிழ்ச்சியுடன் பெருமையுடன் அடையாளப்படுத்திக் கொண்டு, இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் வலிமைக்கும் உதாரணமாக வாழ்ந்து
வருகின்றனர்.

மேலும் குறுகிய அரசியல் ஆதாயங்களை கடந்து மொழி,சாதி, மத, இன வேறுபாடு இன்றி இந்தியாவில் பிறந்த அனைவருமே இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் ஆள்வதற்கு தகுதி படைத்தவர்கள். இந்தியாவின் பிரதமராகவும் குடியரசு தலைவராகவும் பதவி வகிக்க முடியும், என்பதெல்லாம் காலங்காலமாக நடந்திருக்கின்ற, நடந்து வருகின்ற வரலாற்று உண்மைகள் என்பது அனைவருக்கும் தெரியும்.

இவற்றையெல்லாம் மறைத்து,மறந்து, பிராமண சமுதாயத்தின் நியாயமான உரிமைகளையும் கோரிக்கைகளையும் ஒழுங்காக பேசாமல், ஒரு சமுதாயத்திற்கு நியாயம் சொல்கிறேன் என்று விதண்டாவாத விளம்பர தூதுவராக, தமிழக மக்களிடம் விரும்பத் தகாத விஷயங்களை, ஆபாசமான முறையில், வரலாற்றைத் திரித்து, சிதைத்து, கேவலமான முறையில் பேசிய நடிகை கஸ்தூரி அவர்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில்,ஈருடல் ஓர் உயிராக வாழ்ந்து வரும் தமிழர்களையும் தெலுங்கு மொழி பேசும் தமிழ் தெலுங்கர்களையும் யாராலும் பிரிக்க முடியாது. இந்த பிரித்தாலும் சூழ்ச்சி இனி எடுபடாது என்பதை, நடிகையை இயக்கி நடிக்க வைத்த குறிப்பாக புதுக்கட்சி நடிகரும், ஆமை கதை டைரக்டரும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் இந்து மதத்திற்கும் இந்து கோயில்களுக்கும் ஏற்படவிருந்த ஆபத்துகளை அடியோடு விரட்டி, தமிழோடும் தமிழ் மண்ணோடும் இரண்டறக் கலந்து தமிழ் மண்ணை பேணிப் பாதுகாத்த விஜயநகர பேரரசின் பெருமையை திருமலை நாயக்கரின் அருமையை, வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தை, தமிழ் மொழியே என் உயிர் மொழி, என தமிழகத்தின் வளர்ச்சியையும் தமிழ் மொழியின் பெருமையையும் போற்றி வாழ்ந்து அரசியல், ஆன்மிகம் இலக்கியம், உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஈடு இணை இல்லாத சேவையாற்றிய பல ஆயிரம் தமிழ் தெலுங்கர்களையும் கொச்சைப்படுத்த முயற்சிப்பவர்களின் சூழ்ச்சி தமிழகத்தில் எடுபடாது.

தமிழகத்தை பிரித்தால முயலும், இந்த அரசியல் சதிகார சூர்பனகையின் தொடர் ஆணவ பேச்சின் பின்னணியில் உள்ள சதிகார கும்பல்களின்
சூழ்ச்சிகள் குறித்து முழுமையாக தமிழக அரசு விசாரிக்க வேண்டும்.

தமிழகத்தில் மொழி சாதி,மத,இன துவேஷத்துடன் பிரிவினை வாத அரசியல் மூலமாக தமிழக தமிழர்களின் ஒற்றுமைக்கு எதிராக செயல்படுவோர், மற்றும் குறிப்பிட்ட மொழியை, குறிப்பாக தற்போது தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்களை, அவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் வரலாற்றைத் திரித்து, அவமானப்படுத்தும் வகையில் கொச்சையாக பேசியவர்கள் மீது கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏ.என்.எஸ்.பிரசாத்
தமிழக பாஜக செய்தி தொடர்பாளர்
கைப்பேசி: 9840170721

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *