திருச்சி பாராளுமன்ற தொகுதொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம், வாழவந்தான்கோட்டை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட துரை வைகோ எம்.பி

எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களின் இன்று (11.06.2026) துறை சார்ந்த அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டேன்.

முதலில், திருச்சி, திருவரங்கம் வார்டு எண் 1 இல் வார்டில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நமது எம்பி நிதியில் ஏற்கனவே கட்டிகொடுத்த நியாய விலைக்கடை போதாததால், வார்டு உறுப்பினர் மற்றும் ஊர் பொதுமக்களின் கோரிக்கையான இன்னொரு புதிய நியாய விலை கடை அமைத்தல் தொடர்பாக அப்பகுதிக்கு காலை 10:30 மணிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன்.

மேலும், பொதுமக்களின் அழைப்பை ஏற்று, திருவரங்கம் கீழவாசல் கோபுரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக செய்யப்பட்டுவரும் பராமரிப்பு பணிகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் சங்கடங்களை ஆய்வு செய்தேன். விரைந்து அப்பணிகளை முடித்து பொதுமக்களுக்கு பாதைகளை திறந்துவிடுமாறு கேட்டுக்கொண்டேன். அப்போது அங்கு போக்குவரத்திற்கு இடையூறாக வளர்ந்துள்ள மரத்தின் வேர்களை சுட்டிக்காட்டி அதனை சரிசெய்து தர பொதுமக்கள் கேட்டிருந்தனர். அதிகாரிகளை அழைத்து உடனே சரிசெய்ய கேட்டுக்கொண்டேன்.

அதன் பிறகு, திருச்சி, வார்டு எண் 12 மேலசிந்தாமணி பகுதியில் உள்ள பழைய கோட்டை வாய்க்கால் பாலம் இடிக்கப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாற்று பாதையை பார்வையிட்டு, தேர்தல் முடிந்து தொடங்கப்படாமல் உள்ள புதிய பாலம் அமைப்பது தொடர்பாக மாநகராட்சி மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டேன்.

அடுத்ததாக, திருச்சி திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை ஊராட்சியில் தரை நிலை நீர்த்தேக்கத் தொட்டி (Ground Water Tank) அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டேன்.

இந்த ஆய்வுகளில் கண்டறியப்பட்ட நிலைகள் மற்றும் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அந்தந்த பணிகளுக்கான அடுத்தக்கட்ட நகர்வுகளை வடிவமைப்பேன்.

அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திமுக
11.06.2026

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *