பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் உருவான நலத்திட்டப்பணிகளை துவக்கி வைத்த துரை வைகோ எம்.பி

மக்களின் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கும் வளர்ச்சித் திட்டங்கள் மட்டுமல்ல, அவர்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யும் இதுபோன்ற மக்கள் நலப் பணிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், மக்கள் பணிக்கான அரசியலின் உண்மையான வெற்றியாக நான் கருதுகிறேன்.

அதன்படி, இன்று (12.06.2026) எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், 2025–2026 ஆம் ஆண்டு எனது தொகுதி மேம்பாட்டு நிதி மொத்தம் ஒரு கோடியே 56 இலட்சத்தி 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலும், தலைவர் வைகோ அவர்களின் மாநிலங்களவை உறுப்பினர் நிதி ரூ.29 இலட்சம் மதிப்பிலும் கட்டப்பட்ட பல்வேறு திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பித்தேன்.

திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜீயபுரம் மற்றும் அம்மன்குடி ஆகிய இரு இடங்களின் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான திரு. சீ. ரமேஷ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொண்டேன்.

முதல் நிகழ்வாக,

  1. காலை 8:30 மணிக்கு, திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருச்சி மாநகராட்சி 54வது வார்டு வேடுவர் தெருவில் ரூ.17 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடத்தை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வழ்ங்கினேன்.

அதன் பிற்கு,

  1. காலை 9 மணியளவில், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, 20வது வார்டு பூலோகநாதர் கோவில் தெருவில் ரூ.17 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை திறந்து வைத்தேன்.

பிறகு, காலை 9:30

  1. மணியளவில், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 15வது வார்டு சஞ்சீவி நகர் பகுதியில் ரூ.17 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை திறந்து வைத்தேன்.

அதனைத் தொடர்ந்து காலை 10:30 மணியளவில்,

  1. திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி எழில்நகரில், இயக்க தந்தை தகைவர் வைகோ அவர்களின் மாநிலங்களவை உறுப்பினர் நிதியில் ரூ.29 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

மேலும் காலை 11:30 மணிக்கு,

  1. இதே திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குவலக்குடி ஊராட்சியில் உள்ள வீதிவடங்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.18 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடத்தை திறந்துவைத்து கல்வி வளர்ச்சிக்கு அர்பணித்தோம்.

நண்பகல் 12 மணிக்கு,

  1. திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், குண்டூர் ஊராட்சியில் ரூ.17.80 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையமும் திறந்து வைக்கப்பட்டன.

பின்னர் மதியம் 1 மணிக்கு,

  1. திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜீயபுரத்தில் ரூ.8 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிழற்கூடம் திறந்து வைக்கப்பட்டது.

பகல் 1:30 மணிக்கு,

  1. அந்தநல்லூர் ஒன்றியம் அம்மன்குடியில் ரூ.10.60 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

மதியம் 2:15 மணிக்கு,

  1. மணிகண்டம் ஒன்றியத்தில் சோமரசன்பேட்டையில் உள்ள சித்த மருத்துவமனைக்கு ரூ.2.25 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் அமைப்பை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தோம்.

மதியம் 2:30 மணிக்கு,

  1. நாச்சிக்குறிச்சி ஊராட்சியின் இனியானூரில் ரூ.29 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறந்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மதியம் 3 மணிக்கு,

  1. பாகனூர் ஊராட்சியில் ரூ.10 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்குக் கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது.

இறுதியாக மாலை 4 மணிக்கு,

  1. மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்ணுடையான்பட்டி ஊராட்சி சத்திரப்பட்டியில் ரூ.10 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சீரணி அரங்கம் திறந்துவைத்தேன்.

குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சிக்கான அங்கன்வாடி மையங்கள், மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகுப்பறைக் கட்டடங்கள், கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீர்த்தேக்கத் தொட்டிகள், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான நியாயவிலைக் கடைகள், சுகாதார வசதிகளை வலுப்படுத்தும் ஆழ்குழாய் திட்டங்கள், மக்கள் பயன்பாட்டிற்கான பேருந்து நிழற்கூடங்கள், பல்நோக்குக் கட்டடங்கள் மற்றும் சீரணி அரங்கங்கள் என ஒவ்வொரு திட்டமும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்டிருப்பதை நேரில் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

மக்களின் தேவைகளை உணர்ந்து, தொகுதி முழுவதும் வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதில் மனம் நிறைகிறேன்; இன்னும் தொடர்வேன்.

அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திமுக
12.06.2026

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மயானத்தை மீட்கத் துணிந்த மகேசன் அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலரின் தைரியம்

    “புதிய அரசியல் காற்று வீசுது… தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், முதல்வர் விஜய் – இதுதான் மாற்றத்தின் ஆரம்பமா?” சுடுகாட்டையும் விடாத சுறாக்கள்! திருப்பராய்துறையின் விடியல் நாயகன்அண்ணாதுரை!84 வருட அவலம்… 84 நாளில் அவிழ்ந்த அதிசயம்! அநீதிக்கு அடிபணியாதே! அக்கிரமத்தை…

    திருச்சி பாராளுமன்ற தொகுதொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம், வாழவந்தான்கோட்டை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட துரை வைகோ எம்.பி

    எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களின் இன்று (11.06.2026) துறை சார்ந்த அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டேன். முதலில், திருச்சி, திருவரங்கம் வார்டு எண் 1 இல் வார்டில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நமது எம்பி நிதியில் ஏற்கனவே…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *