மதுர ரயில்வே கோட்ட மேலாளருடன் துரை வைகோ எம்.பி சந்திப்பு

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் ரயில்வே சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து இன்று (13.06.2026) துரை வைகோ எம்.பி மதுரை ரயில்வே கோட்ட மேலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து விரிவாக கலந்துரையாடினார்.

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் கழிப்பறை, குடிநீர், RO வசதி, தேசியக் கொடி ஏற்றுதல், அம்ரித் பாரத் நிலைய மேம்பாட்டுப் பணிகளை விரைந்து நிறைவு செய்தல், General Quota மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

மேலும், உடயான்பட்டி மற்றும் பூங்குடி மேம்பாலங்கள், கூடுதல் ரயில் சேவைகள், DEMU மற்றும் ஷட்டில் ரயில் நீட்டிப்புகள், கீரனூர் ROB, இனாம்குளத்தூர் ரயில்வே கேட்டில் நிலத்தடி மின்கம்பி அனுமதி, கோவில்பட்டி மழைநீர் வடிகால் திட்டத்திற்கு NOC உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளையும் முன்வைத்தார்.

புதுக்கோட்டை அம்ரித் பாரத் பணிகள் நவம்பர் 2026-க்குள் நிறைவடையும், General Quota கோரிக்கை பரிசீலிக்கப்படும், கீரனூர் ROB மற்றும் இனாம்குளத்தூர் பிரச்சினைகளில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்ட மேலாளர் உறுதியளித்தார்.

இனாம்குளத்தூர் நிலத்தடி மின்கம்பி பணிக்கு விரைவில் தீர்வு காண, ரயில்வே மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடையே தனது அலுவலகம் தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும் என அவரிடம் உறுதியளித்தார் துரை வைகோ எம்.பி.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    பல்வேறு கோரிக்கைகளோடு இரயில்வே பொது மேலாளரை சந்தித்த துரை வைகோ எம்.பி

    இன்று (21.08.2026) மாலை 5.30 மணி அளவில் திருச்சியில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் (DRM – Trichy) அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சி மக்களின் சார்பில் பல்வேறு முக்கிய ரயில்வே கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார் துரை வைகோ…

    லஞ்ச ரேட் லிஸ்ட்- திருப்பராய்த்துறை மின்சார வாரிய அலுவலகம்.தரிகெட்டு ஓடும் புரோக்கர்கள் – கதறவிடும் கார்த்திகேயன் -AE – ஆதாரங்களைத்தருகிறோம் ஆக்‌ஷனில் இறங்குவாரா அமைச்சர் நிர்மல்குமார்?

    தமிழக முதல்வராக திரு ஜோசப் விஜய் பதவி ஏற்றவுடன் லஞ்சம் வாங்கும் ஊழல் அதிகாரிகளுக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து விட்டது. இதனால் லஞ்சம் முற்றிலும் மறையத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று வாரத்தில் மட்டும் திருப்பராய்த்துறையில் தற்காலிக உதவி மின் பொறியாளராக…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *