மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர்.

மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எப்பொழுதும் பாடும் பாட்டு என்னவென்றால், ரயில்வே இருக்கிறது, காவிரி இருக்கிறது, கரை இருக்கிறது, கோயில் இருக்கிறது.இதனால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுவார்கள்.

ஐயா, 2026 இல் நாம் இருக்கிறோம். இந்தியன் நிலவுக்கு சென்று திரும்புகிறான். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் தயவு செய்து வாங்கும் சம்பளத்திற்கு வேலை பார்த்தால், எல்லாம் செய்ய முடியும் என்று கூறுகிறான் சாமானிய மனிதன்.

தேசிய நெடுஞ்சாலையோ பணம் கொடுத்த இடத்தை கைப்பற்றாமல் ஏழைகளின் இடத்தை இடித்துவிட்டு கார்ப்பரேட்டுகளையும் பணக்காரர்களையும் விட்டு விட்டார்கள். அதனால் அங்கு நெடுஞ்சாலையில் தினமும் மரணங்கள் பழிகள் உயிரிழப்புக்கள் தொடர்கின்றன.இது மரணங்கள் இல்லை அதிகாரிகளின் அலட்சியத்தால் நடக்கும் கொலைகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

தற்பொழுது மேலும் மோசமான விபத்துகளை ஏற்படுத்துவதற்கு ரயில்வே தனது பாதுகாப்பு கட்டமைப்புகளை கூட்டுவதாக கூறிக்கொண்டு மான்சிங் பங்களா முதல் கன்வனூர் வரை ரோட்டில் கொண்டு வந்து வேலி அமைக்கிறது. இந்த வேலி அமைக்கும் பணி கடந்த 15 நாட்களாக நடந்து வருகிறது. இதைப்பற்றி மாநில நெடுஞ்சாலை அதிகாரிகள் கண்டுகொண்டார்களா! தெரியுமா? தெரியாதா? என்று தெரியவில்லை. இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

சாமானிய மனிதனின் கேள்வி என்னவென்றால் அரசாங்கமும் அரசு மக்களுக்காக தான்.மாநில அரசாக இருந்தாலும் சரி, மத்திய அரசாங்கம் இருந்தாலும் சரி, அது எந்த துறையாக இருந்தாலும் மக்களுக்காக தான் செயல்படுகிறார்கள்.
ரயில்வே துறை தங்களது பாதுகாப்பு கட்டமைப்புகளை கூட்டட்டும் எங்களுக்கு எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. ஆனால் ஏற்கனவே இருந்த வேலியை எடுத்துவிட்டு அந்த இடத்தில் இந்த வேலி அமைத்திருக்கலாம் அல்லது அந்த வேலியின் உயரத்தைக் கூட்டி இருக்கலாம்.

அதை விட்டுவிட்டு ரயில்வே இடம் இருக்கிறது என்று கூறிக்கொண்டு நடுரோட்டில் போவதற்கு இடைஞ்சலாக, மரணத்திற்கு தூதுவனாக, எமனுக்கு உதவுவது போல் வேலி அமைப்பது சரியா என்று கேட்கின்றனர்.

“கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே” என்பது போல, பெரும் விபத்துக்கள் நிகழும் வரை காத்திருக்காமல், மாநில அரசும் ரயில்வே நிர்வாகமும் உடனடியாகக் கூடிப் பேசி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சாலைகள் உயிரைக் காக்க வேண்டுமே தவிர, பறிக்கக்கூடாது என்பதே ஒவ்வொரு சாமானியனின் கோரிக்கை!

“மக்களுக்காகவே அரசு, மக்களே அரசு” என்னும் ஜனநாயகத்தில், பொதுமக்களின் பாதுகாப்பை விடவா ரயில்வேயின் நில ஆக்கிரமிப்பு முக்கியம்? ஏற்கனவே இருந்த வேலியை மேம்படுத்தியிருக்கலாம்! வேலியின் உயரத்தை உயர்த்தியிருக்கலாம்! இவை எதையும் செய்யாமல், எமனுக்கு வழிவிடுவது போல் சாலை நடுவே வேலி அமைப்பது என்ன நியாயம்?

ஆகவே மாநில நிர்வாகமும், ரயில்வே நிர்வாகமும் பேசி கூடி பொதுமக்களின் பாதுகாப்பை கூட்டுவதற்கான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்பது சாமானியனின் கோரிக்கையாக உள்ளது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *