ரவுண்டு கட்டும் ரமேஷ்.44கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலத்தை மீட்பதற்கான பணிகள் துவக்கம்

ரவுண்டு கட்டும் ரமேஷ்.
44கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலத்தை மீட்பதற்கான பணிகள் துவக்கம்.

அறநிலையத்துறை அமைச்சரின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்.
அறநிலையத்துறை உடன் கைகோர்க்கும் அருண் ஐபிஎஸ்.

அறத்தின் குரல் – அறநிலையச் சொத்தைக் காப்போம்!
பழைய கணக்கு; பலமான போக்கு – திருப்பராய்த்துறைநாதர் சொத்து மீட்புப் போராட்டம்!

“சிவன் சொத்து குல நாசம்” என்பதற்கிணங்க, இறைவனின் சொத்துக்களை எவரும் அபகரிக்கக் கூடாது என்பது நியதி. ஆனால், திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், திருப்பராய்த்துறைநாதர் சுவாமிக்குச் சொந்தமான சுமார் 440 சென்ட் நிலம், சந்தை மதிப்பு ரூ.44 கோடி, போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக மாற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முரண்பாடுகள் இதோ:
சர்வே எண் 176/1: 1.96 ஏக்கர் நிலம், முறையற்ற வகையில் தபோவனத்தின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது.
சர்வே எண் 176/3: 3.30 ஏக்கர் நிலம், 176/3A (தபோவனம்) மற்றும் 176/3B -அறநிலையத்துறை என சட்டவிரோத உட்பிரிவு செய்யப்பட்டுள்ளது.

நிழல் தேடும் நிஜம் – ஆவணங்கள் சொல்லும் உண்மை!
1927-ஆம் ஆண்டின் செட்டில்மெண்ட் ரிஜிஸ்டர் ஆதாரங்களின்படி, சர்வே எண் 176/1 மற்றும் 176/3 ஆகியவை முழுமையாக அறநிலையத்துறைக்குச் சொந்தமானவை. 1942-இல் தான் “ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம்” அந்தப் பகுதிக்கு வந்ததாகக் கூறப்படும் நிலையில், அதற்கு முன்னரே அறநிலையத்துறைக்குச் சொந்தமான இந்த நிலங்கள், எப்படி தபோவனத்தின் பெயருக்கு மாறின? என்பதுதான் சமூக ஆர்வலர்களின் மிகப்பெரிய கேள்வி.

முழுசொற்றில் பூசணிக்காய் மறைக்கப் பார்க்கும் ஸ்ரீரங்கம் வருவாய் வட்டாட்சியர்
ஸ்ரீரங்கம் வருவாய் வட்டாட்சியருக்கும் பல கோரிக்கைகள் அனுப்பிய போதும் அவர்கள் மலுப்பலான பதில்களையே வழங்குகின்றனர்.ஸ்ரீரங்கம் வருவாய் வட்டாட்சியர் கொடுத்துள்ள விசாரணை அறிக்கையின் படி, “ராமகிருஷ்ண தபோவனம் அறநிலையை துறைக்கு சொந்தமான இடத்தை உரிய ஆவணங்கள் மூலம் பத்திரம் பதிவு செய்து தங்களுடைய நிறுவனத்தின் பெயரில் பட்டா மாற்றம் செய்து அனுபவித்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

முதல்வரின் முகவரி துறை மூலமாக ஆவணங்களின் விவரங்களை கேட்டல் முன்னுக்குப் பின் முரணான பதில் கொடுத்து குழப்ப பார்க்கிறார்கள். ஒவ்வொரு முறையும் ஒரு பதில்! ஏதோ அட்ஜஸ்ட்மென்ட் நடந்துவிட்டது போல் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

அதிகாரிகளின் அதிரடி – அரங்கேறும் மீட்புப் பணி!
“தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடி வெல்லும்” என்பதற்கு ஏற்ப, இந்த முறைகேடு குறித்து லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு துறைக்கு மின்னஞ்சல் வாயிலாகப் புகார் அளிக்கப்பட்டது. இதன் விளைவாக, சென்னையில் இருந்து பறந்து வந்த அறநிலையத்துறை ஆணையர் உத்தரவுப்படி அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் -திருச்சி, இந்த விவகாரத்தில் உடனடி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

விடை தெரியாத கேள்விகள்
1927ல் 176/1 – 1.96 ஏசெ பிராய்த்துறைநாத சுவாமி-அறநிலையத்துறைக்கு சொந்தமானது. ஆனால் தற்போதைய வருவாய்த்துறை கணக்கின்படி இந்த இடம் 176/1 – 1.96 ஏசெ “ஸ்ரீ ராமகிருஷ்ணன் தபோவனத்தின்” பெயரில் உள்ளது. இது எங்கனம் சாத்தியமாயிற்று?

1927ல் 176/3 – 3.30 ஏசெ பிராய்த்துறைநாத சுவாமி-அறநிலையத்துறைக்கு சொந்தமானது. ஆனால் தற்போது அது 176/3A & 176/3B என உட்பிரிவு செய்யப்பட்டு, அதில் 176/3A – 2.44ஏசெ இடம் ஸ்ரீராமகிருஷ்ணன் தபோவனத்தின் பெயரிலும் மீதியிடம் 176/3B – 0.86ஏசெ அறநிலையத்துறை பெயரிலும் உள்ளது. இது எங்கனம் சாத்தியமாயிற்று?

எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைகள்:
*தபோவனம் வசம் உள்ள பிற அறநிலையத்துறை நிலங்களையும் பழைய கிராமக் கணக்குகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும்.
*அறநிலையத்துறை ஆணையத்தின் அனுமதியின்றி நடந்த இந்த இடமாற்றங்கள் செல்லாது என அறிவிக்கப்பட வேண்டும்.
*மக்களின் வரிப்பணமும் இறைவனின் சொத்தும் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுத்து, உரிய சட்ட நடவடிக்கை மூலம் நிலத்தை மீட்க வேண்டும்.

இந்த மீட்புப் பணியில் மாவட்ட நிர்வாகமும், அறநிலையத்துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாகும். உண்மை வெல்லும், தர்மம் நிலைக்கும்!

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    துரை வைகோ எம்.பி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

    இன்று (22.07.2026) திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளோடு மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை புது தில்லியில் உள்ள அலுவலகத்தில் துரை வைகோ எம்.பி சந்தித்தார். முதலாவதாக, திருச்சிராப்பள்ளியில் உலர் துறைமுகம் (Dry Port…

    அறநிலையத்துறை அமைச்சரின் தொகுதியில் அவலநிலை. சிவன் கோயில் – கேவலமான ஊதியப் பட்டியல்: இது சம்பளமா அல்லது பிச்சையா? ஆர்டிஐ வெளிக்கொணரும் அதிர்ச்சி, மாத ஊதியம்: ரூ. 200. முதல் ரூ. 7,000. வரை.

    ஆன்மீக பூமிக்கு நேர்ந்த அவலம்: திருவாசக சாட்சியுடன் ஒரு வயித்தெரிச்சல் ஆதங்கம்! அரசின் கவனத்திற்கு: ஸ்ரீரங்கம் தொகுதி, திருப்பராய்த்துறை சிவன் கோவில் அவல நிலை. ஆன்மீகமும் இறையருளும் பொங்க வேண்டிய திருக்கோயில்களில், இன்று உழைப்புக்கும் மனித நேயத்திற்கும் எதிராக அரங்கேறிவரும் கொடுமைகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *