ஸ்ரீரங்கத்தை “சிங்கப்பூர்” ஆக்க ரத, கஜ, துரக, பதாதிகளை களமிறங்கிய அமைச்சர் ரமேஷ்.சதுரங்க சேனைகளின் களப்பணி- நந்தவன மக்களின் 16 ஆண்டுகாலத் துயருக்குத் தீர்வு கிடைக்குமா?

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை கிராமத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்ற தொகுதி பிரச்சனைகளை பூதக்கண்ணாடிக்கொண்டு அலசும் சதுரங்க சேனைகள்.

தமிழகத்தின் அறநிலையத்துறை அமைச்சரும், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ரமேஷ், தனது தொகுதியை மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் முனைப்பில், தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளார்.

சதுரங்க சேனைகளின் களப்பணி
தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, ‘சதுரங்க சேனைகள்’ என்ற பெயரில் தன்னார்வலர்கள் மற்றும் கட்சிப் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவை அமைச்சர் ரமேஷ் களமிறக்கியுள்ளார். தொகுதியில் உள்ள ஒவ்வொரு பிரச்சினையையும் நுணுக்கமாக ஆராய்ந்து, அவற்றை கால அவகாசத்தின் அடிப்படையில் வகைப்படுத்தி, துறை ரீதியான அதிகாரிகளை நேரில் அணுகி நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

நந்தவன மக்களின் 16 ஆண்டுகாலப் போராட்டம்
இந்தச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, கடந்த 16 ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி வஞ்சிக்கப்பட்டுள்ள திருப்பராய்த்துறை ‘நந்தவன’ மக்களின் குறைகளை அமைச்சர் தரப்பு நேரில் கேட்டறிந்தது. தமிழக வெற்றி கழகத்தின் மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேவேஷ், அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சங்கர் மற்றும் அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர் நந்தவன சங்கர் உள்ளிட்டோர் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

மக்கள் முன்வைக்கும் அடுக்கடுக்கான புகார்கள்:
நந்தவன மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன:
அரசு நில ஆக்கிரமிப்பு: திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் உள்ள பல ஏக்கர் அரசு மற்றும் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன.
பாகுபாடு: அறநிலையத்துறைக்குச் சொந்தமான 52 ஏக்கர் நிலம் (சுமார் ரூ.518 கோடி சந்தை மதிப்புடையது) ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த இடத்தில் அனைத்து வசதிகளும் உள்ள நிலையில், ஏழைகள் வசிக்கும் நந்தவனப் பகுதியில் மட்டும் ஏன் அடிப்படை வசதிகள் மறுக்கப்படுகின்றன என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மின்சாரம் மற்றும் குடிநீர்
தாங்கள் குடியமர்த்தப்பட்டபோது இருந்த வசதிகள், ஏழைகள் குடிவந்த பிறகு திட்டமிட்டு நீக்கப்பட்டதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மக்களின் கோரிக்கைகள் என்ன?

  1. நில அளவை: மக்கள் வசிக்கும் பகுதியை மீண்டும் முறையாக நில அளவை செய்ய வேண்டும்.
  2. விசாரணை: 1942-க்குப் பிறகு, அறநிலையத்துறை நிலங்கள் எவ்வாறு தபோவனத்தின் பெயருக்கு மாற்றப்பட்டன என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்.
  3. வருவாய் ஈட்டல்: ராமகிருஷ்ண தபோவனத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களுக்கு முறையாக அடிமனை வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். இதன் மூலம் மாதத்திற்கு ரூ.5 லட்சம் வரை அரசுக்கு வருவாய் கிடைக்கும். அதே அடிப்படையில் நந்தவன மக்களுக்கும் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும்.
  4. இதே போல் ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனதிடமுள்ள மற்ற இடங்களுக்கு அருகில் உள்ள அறநிலையத்துறை இடங்களையும் அதன் உட்பிரிவுகளையும் ஒரு முறை பழைய மற்றும் புதிய கிராம கணக்கின்படி சரி பார்க்க வேண்டும்
  5. வீட்டுமனைப் பட்டா: நந்தவனத்தில் வாழும் 16 ஆண்டு கால மக்கள் அனைவருக்கும் தலா 3 சென்ட் வீட்டு மனை வழங்க வேண்டும். இதற்காக ஆக்கிரமிப்பில் உள்ள சுடுகாடு, நத்தம், வனத்துறை மற்றும் காவிரி ஆற்று நிலங்களை மீட்டெடுக்க வேண்டும்.

எதிர்பார்ப்பில் தொகுதி மக்கள்
“ஊருக்கே அமைச்சராக இருந்தாலும், முதலில் என் தொகுதி மக்களுக்கு நான் எம்எல்ஏ” என்று கூறி களமிறங்கியுள்ள அமைச்சர் ரமேஷ், இந்த நந்தவன மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, தான் அளித்த வாக்குறுதியைச் செயல்படுத்துவாரா? ஸ்ரீரங்கத்தை சிங்கப்பூராக மாற்றும் ரமேஷின் இந்த ‘திருவிளையாடல்’ எந்த மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *