அறநிலையத்துறை அமைச்சரின் சொந்தத் தொகுதியின் அவலம்ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை.

திருப்பராய்த்துறை பஞ்சாயத்து பணியாளர்கள் மூவரை மாற்ற மக்கள் கோரிக்கை, திருப்பராய்த்துறை தண்ணீர் பிரச்சனை என்பது திட்டமிட்ட சதி வேண்டுமென்றே செய்கிறார்கள் என்று ஒரு சாரார் குற்றம் வைக்கின்றனர். திருப்பராய்த்துறை ஊராட்சியில் இருந்து கிட்டத்தட்ட தமிழக முழுவதற்கும் தண்ணீர் செல்கிறது. ஆனால் அங்கு வசிக்கும் மக்கள் காவேரி கரை அருகே காலி கொடுத்துடன் சாலை மறியல் செய்வது என்பது நிர்வாகக் குளறுபடியை காண்பிக்கிறது.

ஒரு பக்கம் தொகுதியை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று துடிக்கும் அமைச்சரும் அவரது சேனைகளும், இங்கு மக்கள் காலி குடத்துடன் தெருவில் நிற்பது புரியாத புதிராக இருக்கிறது. உயிர் வாழ்வதே பிரச்சனையா இருக்கு, எங்களுக்கு பிரியாணி வேணாம். பழைய சாதம் போடுங்க அது போதும் முதல்ல அப்படிங்கிறாங்க மக்கள்.

திருப்பராய்த்துறை பஞ்சாயத்தில் அடிக்கடி பைப் உடைந்து விடும் வயர் எரிந்து விடும் தண்ணீர் வராது என பல பிரச்சினைகள் உள்ளன. மூன்று நாளைக்கு முன்னால்தான் 15எச்பி மோட்டார் போட்டனர், புது மோட்டார் போட்ட பொழுது எப்படி வயர் எரிந்தது? என்பது தான் கேள்வி. வயர் எறிந்த காரணத்தினால் இரண்டு நாட்கள் தண்ணீர் வரவில்லை. அதற்கு பின்னர் மெயின் பாக்ஸ் எரிந்து விட்டது என்று ஏதாவது ஒன்று சாக்குபோக்கு சொல்லி தண்ணீருக்கு என மக்களை போராட வைக்கின்றனர்.

குடிநீர் என்பது திருப்பராய்த்துறை ஊராட்சி மக்களுக்கு கடந்த பல ஆண்டுகளாகவே போராட்டமாக உள்ளது.பஞ்சாயத்து செயலர் சேகர் இவர் கடந்த 30 ஆண்டுகளாக இந்த இடத்திலேயே வேலை பார்க்கிறார். இவருடன் சேர்ந்து அணலை சேகர் மற்றும் நவநீத் இவர்கள் இருவரும் தண்ணீரை திறப்பது மூடுவதற்குமான பணியை செய்து வருகிறார்கள். தண்ணீர் திறந்து மூடு வேலையை இவர்கள் ஒழுங்காக செய்யவில்லை என்பது தான் இப்பொழுது பிரச்சனையே.

அணலை சேகர் தண்ணீர் திறக்கும் வேலை தவற மத்த எல்லா வேலையும் செய்வார் என்று மக்கள் கூறுகிறார்கள். இவர்கள் மூவரையும் மாற்றினால் திருப்பராய்த்துறை ஊராட்சியில் பிரச்சனையே இருக்காது என்று சொல்கிறார்கள் ஏனென்றால் இவர்கள் மக்களை மதிப்பதில்லை தெருவிளக்கு எரியவில்லை என்று சொன்னால் கண்டு கொள்வதில்லை. என்ன பண்ணுனமோ பண்ணிக்க அப்படித்தான் இருப்பேன் அப்படின்னு சொல்றதா சொல்றாங்க???

திருப்பராய்த்துறை ஊராட்சியில் தண்ணீர் பிரச்சினை என்பது அதிகாரிகளின் அலட்சியம், ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் பஞ்சாயத்து கிளர்க் மற்றும் அவரது எடுபுடிகள் இவர்கள் பஞ்சாயத்தை கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதாக கூறுகிறார்கள். தினமும் 3000 பேர் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் உயர்மட்ட கைமாஸ் லைட் கடந்த ஒரு வருடமாக எரியாமல் இருக்கிறது, மக்கள் கோரிக்கையை வைத்தும் மனுக்கள் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.இதே போல் ஊரில் பல இடங்களில் தெருவிளக்கு எரிவதில்லை, கேட்டால் நீ எங்க வேணாலும் பொய் சொல்லிக்க இது எல்லாம் ஓகே நான், அப்படி தான் பண்ணுவேன் என பஞ்சாயத்து செயலர் சேகர் அவர்களும் அவரது எடுபுடிகளும் கூறுவதாக தெரிவிக்கிறார்கள்.

கடந்த காலங்களில் திருப்பராய்த்துறை ஊராட்சியில் தண்ணீருக்கு என பல கோடிகள் செலவழிக்கப்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்துள்ளனர், அந்த பணம் முறையாக பயன்படுத்தவில்லை. அனைவருக்கும் காவேரி குடிநீர் கிடைக்கவில்லை என்று மக்கள் பல வருடங்களாக மனுக்கள் கொடுத்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம்.

திருப்பராய்த்துறை நெடுஞ்சாலையில் ரோடு எப்பொழுதும் இருட்டாகவே இருக்கும். இங்கு பல ஏரியாக்களுக்கு இன்று வரை தெரு விளக்குகளை போடவில்லை. மக்கள் மனுக்கள் கொடுத்துக் கொடுத்து கலைத்து விட்டனர். அதன் விளைவே இன்றைய போராட்டம் இது ஒரு ஆரம்பம்தான் என்பது போல தெரிகிறது.

ஸ்ரீரங்கம் தொகுதியை சிங்கப்பூர் ஆக்குவது எல்லாம் பின்னர் முதலில் அறநிலையத்துறை அமைச்சர் மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர் தெருவிளக்கு சுகாதாரம் போன்றவற்றைத் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    ஸ்ரீரங்கத்தை “சிங்கப்பூர்” ஆக்க ரத, கஜ, துரக, பதாதிகளை களமிறங்கிய அமைச்சர் ரமேஷ்.சதுரங்க சேனைகளின் களப்பணி- நந்தவன மக்களின் 16 ஆண்டுகாலத் துயருக்குத் தீர்வு கிடைக்குமா?

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை கிராமத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்ற தொகுதி பிரச்சனைகளை பூதக்கண்ணாடிக்கொண்டு அலசும் சதுரங்க சேனைகள். தமிழகத்தின் அறநிலையத்துறை அமைச்சரும், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ரமேஷ், தனது தொகுதியை மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும்…

    ரவுண்டு கட்டும் ரமேஷ்.44கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலத்தை மீட்பதற்கான பணிகள் துவக்கம்

    ரவுண்டு கட்டும் ரமேஷ்.44கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலத்தை மீட்பதற்கான பணிகள் துவக்கம். அறநிலையத்துறை அமைச்சரின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்.அறநிலையத்துறை உடன் கைகோர்க்கும் அருண் ஐபிஎஸ். அறத்தின் குரல் – அறநிலையச் சொத்தைக் காப்போம்!பழைய கணக்கு; பலமான போக்கு – திருப்பராய்த்துறைநாதர்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *