
இன்று 7.11.2024 வியாழன் மாலை நடைபெறும் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று திருச்சி மாநகர், திருவரங்கம் பகுதி 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் அப்பீஸ் (எ) சு.முத்துக்குமார் திருவானைக்காவல் அ/மி அகிலாண்டேசுவரி அம்மன் திருக்கோவில் முருகன் கோவில் சன்னதி மற்றும் சுற்றுப்பகுதிகளை JCB இயந்திரம் கொண்டு சீரமைப்பு செய்தார்.
மற்ற வார்டு உறுப்பினர்களும் இவரைப்போல செயல்பட்டால் ஸ்ரீரங்கம் நகராட்சி திருச்சியின் நெம்பர் ஒன் நகராட்சியாக மாறும் ஆனால் அவர்கள் அப்படியில்லையே என ஆதங்கப்படுகின்றனர் மற்ற வார்டு வாக்காள பெருங்குடி மக்கள்.
