
இமக தலைமை அறிவிப்பு!
ஓம்கார் பாலாஜி கைது !
இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் நடத்த அழைப்பு !
இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணியின் மாநில தலைவர் திரு ஓம்கார் பாலாஜி அவர்கள் ஈஷா யோகா மையத்திற்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நக்கீரன் கோபால் குறித்து மிரட்டும் தோனியில் பேசியதாக கூறி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்

திரு ஓம்கார் பாலாஜி அவர்கள் தனது வழக்கறிஞர் மூலம் நியாயம் கிடைக்க வேண்டி நீதிமன்றத்தை நாடி இருந்தார். சென்னை உயர்நீதிமன்றம் திரு ஓம்கார் பாலாஜி அவர்களை வருகிற புதன்கிழமை அன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் திரு ஓம்கார் பாலாஜியை காவல்துறையினர் அத்துமீறி கைது செய்தனர் இது முற்றிலும் தவறான முன்னுதாரணம் ஆகும்.
நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

நீதிமன்றம் ஓம்கார பாலாஜிக்கு அவகாசம் அளித்துள்ளதையே மீறி நள்ளிரவில் அத்துமீறி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டவிரோத
காவலில் வைத்துள்ளனர்.
இதனை கண்டிக்கும் விதமாக இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் சார்பில் தமிழக முழுவதும் இன்று காலை 11 மணியளவில் திரு ஓம்கார் பாலாஜி அவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
