

மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும், திரு.ஆவடி.சா.மு.நாசர் அவர்களும் நாகூர் தர்காவில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பழுது பார்த்தல் மற்றும் புனரமைப்பு பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, அறங்காவலர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்கள்.

இந்நிகழ்வில் மாவட்டக் கழகச் செயலாளர்-தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் திரு.என்.கெளதமன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஆளூர் ஷாநவாஸ், திரு.நாகை மாலி, முதன்மை அறங்காவலர் கலிஃபா திரு.மஸ்தான் சாஹீத், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி-மேம்பாட்டுக் கழகத் தலைவர் திரு.உ.மதிவாணன், மாவட்ட ஆட்சியர் திரு.ஆகாஷ் இ.ஆ.ப. ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
இடம்: நாகூர்
