திருச்சி மாநகராட்சி 1 கோடியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க பராமரிப்பு பணிகள்!

திருச்சி மாநகராட்சி 1 கோடியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க பராமரிப்பு பணிகள்!

திருச்சி மாநகராட்சி சார்பில் 1 கோடி ரூபாய் செலவில் சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய வாரங்களில் கணிசமான மழையால் நகரம் முழுவதும் பல முக்கிய சாலைகள் சேதமடைந்துள்ள நிலையில், திருச்சி மாநகராட்சி சேதமடைந்த சாலைகளில் சிலவற்றை முன்னுரிமை அடிப்படையில் `1 கோடியில் சீரமைக்க உள்ளது. முதற்கட்டமாக, V மண்டலத்தில் உள்ள அனைத்து பேருந்துகள் செல்லும் சாலைகளிலும் உள்ள பள்ளங்கள் ரூ.20 லட்சத்தில் சரிசெய்யப்படும். அதன்பிறகு, மற்ற நான்கு மண்டலங்களுக்கு முக்கிய சாலைகளை சீரமைக்க நிதி கிடைக்கும்.

அக்டோபர் மாதம் 1 -ந் தேதி முதல் நவம்பர் மாதம் 11-ந் தேதி வரை திருச்சி மாவட்டத்தில் மட்டும் 263 மிமீ அளவுக்கு மழை பெய்துள்ளது. இது 26 சதவீதம் அதிகமாகும். இந்த மழை காரணமாக புதிதாக போடப்பட்ட சாலைகள், மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள், குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட சாலைகள் என அனைத்தும் சேதமடைந்துள்ளது.

தென்னூர் ஹைரோடு, இவிஆர் சாலை, மற்றும் தில்லை நகர் மெயின் ரோடு போன்ற சாலைகள் அனைத்தும் சேதமடைந்து தண்ணீர் தேங்கும் நிலை உருவாகி உள்ளது. இது தொடர்பாக வாகன ஓட்டிகள் அளித்த புகாரின் பேரில் மாநகராட்சி சார்பில் குறிப்பிட்ட சாலைகளில் பேட்ச் வொர்க் பணிகள் செய்யப்பட இருக்கிறது. இது தொடர்பாக 5-வது மண்டலத்தில் பணிகள் மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது. இது இந்த மாத இறுதிக்குள் நிறைவடையும் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் மழை காலத்தில் சாலைகள் அமைப்பதால் மீண்டும் சேதமாக வாய்ப்புள்ளது என்பதால் முக்கியமான சாலைகளில் மட்டுமே பேட்ச் வொர்க் பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தில்லைநகர், தென்னூர், உறையூர், வயலூர் சாலை, கருமண்டபம் போன்ற பகுதிகளிலும் விரைவில் சாலைகள் சீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வாகன ஓட்டிகள் கூறும்போது, சாலைகள் அமைக்கப்படும்போது தரமானதாக அமைக்க வேண்டும். மேலும் ஒரே தளமாக சாலைகள் அமைக்க அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். ஒரேதளமாக இல்லை என்றாலும் அது மிகப்பெரும் ஆபத்து தான். என்று அவர்கள் தெரிவித்தனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *