வாக்காளர் சிறப்பு பட்டியல் திருத்த முகாமை ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

வாக்காளர் சிறப்பு பட்டியல் திருத்த முகாமை ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி: நவ18

தேர்தல் ஆணைய அறிவிப்பின் படி தமிழக முழுவதும் நவம்பர் 16 17 23 24 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் நடைபெற உள்ளது
மேலும் இதன் ஒரு பகுதியாக இன்று திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல் துறை அமைச்சரும்மானஅன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளி, காட்டூர் புனித லோமினால் மேல்நிலைப்பள்ளி, பொன்மலை ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கிழக்கு தொகுதி சஞ்சீவி நகர் சமுதாயக்கூடம் உட்பட்ட இடங்களில் நடைபெறும் வாக்காளர் சிறப்பு திருத்த முகாம்மை நேரில் சென்று ஆய்வு செய்தார் மேலும் அப்போது அவர் கழக நிர்வாகிகளுடன் எவ்வாறு பணி செய்வது என்று அறிவுறுத்தினா,அதிகாரிகளிடம் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை குறித்தும் கேட்டறிந்தார் மேலும் இந்த முகாமில் இன்று சுமார் 75 பேர் வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படம் மாற்றுதல் பெயர் மாற்றுதல், ஆகியவைகளை திருத்திக் கொண்டனர்

மேலும் இந்த ஆய்வின்போது மாநகர செயலாளர் மண்டல தலைவருமான மதிவாணன் பகுதி செயலாளர்கள் நீலமேகம், தர்மராஜ், மோகன், சிவக்குமார், மற்றும் பாக முகவர்கள் வட்ட கிளைகழக நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    நூற்றுக்கால் மண்டபத்தில் நர்சரி… குழந்தைகளின் உயிருடன் யார் விளையாடினார்கள்? “ஆயிரம் ஆண்டு கோவில்… அனுமதியில்லா பள்ளி… யார் கொடுத்த தைரியம்?”

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், வழிபாட்டு மரபின் சின்னமாக இல்லாமல், பல ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிய மழலையர் பள்ளியின் வகுப்பறையாக மாற்றப்பட்டிருந்தது கல்வித்துறையின் ஆய்வில் வெளிச்சத்துக்கு…

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு!

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு! பயணிகள் அலறல்.. பஸ் உரிமையாளர்கள் மிரட்டல்.. போக்குவரத்து துறை தூங்குவது ஏன்? “பச்சக்கிளி முத்துச்சாரம்.. பார்க்காத பூமி ஏதம்!” ஆனால், திருச்சியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி, தனியார்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *