வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு.! தமிழக அரசு அரசாணை..!

வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு.! தமிழக அரசு அரசாணை..!

வாரிசு சான்று வழங்குவதில் புதிய நடைமுறைகளை பின்பற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக அரசு வாரிசு சான்று வழங்குவதில் புதிய நடைமுறையை ஏற்படுத்தி கடந்த 2022 செப்டம்பர் மாதம் ஆங்கிலத்தில் அரசாணை (நிலை) எண்
472 வெளியிட்டது.

தற்பொழுது தமிழில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது, “தமிழக அரசு வாரிசு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை, இறந்தவரின் பெற்றோர், மனைவி அல்லது கணவர், மகன், மகள் (மகன் இறந்திருந்தால், மருமகள் மற்றும் பேரன், பேத்தி) வாரிசுகளாக அறிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது. இனி, கணவர் அல்லது மனைவி, மகன் அல்லது மகள் மட்டுமே வாரிசாக அறிவிக்கப்படுவர். சான்றிதழில், உயிருடன் இருக்கின்றனரா அல்லது இறந்துவிட்டனரா என்று தெளிவாக குறிப்பிட வேண்டும்.

மகன் அல்லது மகள் இறந்திருந்தால், அவரது வாரிசுதாரர் தனியே வாரிசு சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். திருமணம் ஆகாதவர் இறந்தால், தந்தை, தாய், சகோதரர், சகோதரிகள் வாரிசுகளாக அறிவிக்கப்படுவர். ஒருவர், 7 ஆண்டுகளுக்கு மேல் காணாமல் போயிருந்தால், நீதிமன்றத்தை நாடி விண்ணப்பிக்கலாம். வாரிசுகள், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களாக இருந்தால் அவர்களின் பாதுகாவலர் அல்லது இறந்தவரின் சகோதரர் அல்லது சகோதரிகள் விண்ணப்பிக்கலாம். தாசில்தார் வழங்கிய வாரிசு சான்று தொடர்பாக, ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஓராண்டிற்குள் மேல்முறையீடு செய்யலாம். அதன்பின், மாவட்ட வருவாய் அலுவலரிடம் மூன்றாண்டுக்குள் சீராய்வு மேல்முறையீடு வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருப்பராய்த்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் இல்லையா? கல்வி வணிகமயமாக்கப்படுகிறதா?87 வயது முதியவரின் ரத்தக் கண்ணீர் மனு! “நான் இழந்த கல்வியை… என் ஊர் குழந்தைகள் இழக்கக் கூடாது!” ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்…

    உயிரைக் கொடுத்து… நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள்!செவி சாய்ப்பாரா தமிழக முதல்வர் விஜய் !உடனடி, அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?அமைச்சர் சரத்குமார்

    ராணுவ வீரர்களின் தியாகம்… விலையில்லாச் சொத்து! முப்படைத் தளபதி பதக்க வீரர்களுக்கு தமிழக முழுவதும் கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கக் கோரிக்கை. திருச்சி: நாட்டின் எல்லையில் விழித்திருந்து தாய்நாட்டைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், முப்படைத் தளபதிகளின்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *