ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பொக்கிஷமான நினைவுகள் இன்று ஞாபகம் வருதே பசுமை நிறைந்த நினைவுகளே பாடி பறந்த பறவைகளைப் போல 50ஆண்டுகள் கழித்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா காமாட்சிபுரம் பச்சையப்பா இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது ஏராளமான பழைய மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்
50 ஆண்டுகள் கழித்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா காமாட்சிபுரம் பச்சையப்பா இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது
முன்னாள் மாணவர்கள் பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் இருந்தும் தங்களுடன் படித்த பள்ளி பருவ மாணவர்களை சந்தித்து தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் அற்புதமான ஒரு நிகழ்வு மற்றும் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வரும் அனுபவங்கள் குடும்ப சூழல்கள் தங்களது நண்பர்களுடன் பள்ளியில் கழித்த பொழுதுபோக்குகள் என சுவாரசியமாக பகிர்ந்து கொண்டனர்
பசுமை நிறைந்த நினைவுகளை பாடி பறந்த பறவைகளை போல தங்களது பழைய நினைவுகளை 50 ஆண்டுகள் கழித்து சந்தித்து பார்த்து அனைத்து உறவாடி தங்களுடைய பாசத்தை வெளிப்படும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி கட்டி அணைத்து சந்தோசத்துடன் சிரிப்புடன் பகிர்ந்தனர்
ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கவும் சிறப்பாக செயல்படும் உறுதுணையாக இருந்த பள்ளி ஆசிரியர்களை நினைவு கூர்ந்து அவர்களின் கைகளைப் பிடித்து நன்றி கடன் செலுத்தினர்
முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதல் இந்நாள் தலைமை ஆசிரியர்கள் வரை ஒருவரை ஒருவர் அன்புகளை வெளிப்படுத்தி தங்களது பாசத்தினை வெளிப்படுத்தினர்
ஆசிரியர்கள் பேசுகையில் தங்களிடம் படித்த பள்ளி மாணவர்களை சந்தித்து பெரு மகிழ்ச்சி அடைவதாகவும் தள்ளாடு வயதிலும் மாணவர்கள் கூப்பிட்டவுடன் மாணவர்களைக் கண்டு தங்களது மகிழ்ச்சியை ஏற்படுத்தினர்
ஒவ்வொரு மாணவ மாணவிகளும் தற்போது பெரிய உயரிய பதவிகளில் இருந்தாலும் தங்களது ஆசிரியர்களை கண்டவுடன் அதை மாணவர் நிலைக்கு தள்ளப்பட்டது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன் உதாரணம் என்பதை இந்த 50 ஆண்டுகள் கழித்து சந்தித்த மாணவ மாணவிகளின் உரை கருத்தாகவும் இருந்தது
2000 ஆண்டில் அடியெடுத்து வைக்கக்கூடிய தங்களது பேரக் குழந்தைகளுக்கு தங்களது பள்ளி அனுபவங்களையும் ஆசிரியரின் மதிப்புகளையும் எடுத்துரைத்து வாழ்க்கையில் கற்றுக் கொடுக்கும் ஒரு சிறந்த பள்ளியாக தேனி மாவட்டம் காமாட்சிபுரம் பச்சையப்பா இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி விளங்கி வருகிறது
இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பினை வாழ்வரசி பாண்டியன் குழுவினர் ஏற்பாடு செய்து இருந்தனர்
மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உற்சாகத்தையும் பழைய நினைவுகளை கொண்டு சென்றது வந்திருந்த பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது