

ஆப்பக்கூடு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் பாரம்பரிய ஆப்பக்கூடு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது ஆப்பக்கூடு குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், அடுப்படியில் மத்து, கரண்டி, துடுப்பு போன்றவற்றை செருகி வைக்கப் பயன்படும் மரத்தாலான துளைகளுள்ள பலகை ஆப்பக்கூண்டு = ஆப்பக்கூட்டு = ஆப்பக்கூடு என்பர். ஆப்பக்கூடானது மரத்தில் இருந்து செதுக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தனித்துவமான வடிவத்துடன் உள்ள துளைகளில் மத்து, அகப்பை, துடுப்பை சொருகி வைப்பார்கள். பழங்காலத்தில் வீட்டில் பெரியவர்கள் எய்யா சின்னவன அந்த ஆப்பக்கூண்டுல கீற மத்த எடுத்துத் தந்துட்டு போய்யா என்ற குரலை கேட்டிருக்கலாம். அதற்கு தாத்தா
நம்மூட்ல கீற ஆப்பக்கூடானது, ஆசாரி நீ பொறக்கறதுக்கு முன்னாடி செஞ்சி தந்தது, தெரியுமா என்பார். மாற்றம் ஒன்றே மாறாதது. சிந்நனையின் தொடர்ச்சியே அறிவியல் வளர்ச்சி.
அறிவியல் வளர்ச்சியே தொழில்நுட்ப புரட்சி. இதனால் ஆப்பக்கூடு பயன்பாடு வழக்கொழிந்து விட்டது. அதனால் இன்று பாரம்பரிய பொருளாகவும் இளம் தலைமுறைக்கு எடுத்துரைக்கும் பொருளாகவும் மாறிவிட்டது என்றார்.
