
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் : 9715328420
மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது!
தாராபுரத்தில் பெற்ற மகளை 4,வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.ஆண்டனி விக்டர் நோயல் அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கண்ணன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆண்டனி விக்டர் நோயல்(46) தனியார் அக்ரிகல்ச்சர் நிறுவனத்தில் பீல்ட் ஆபீஸ் ஆக பணியாற்றி வருகிறார்.இவர் தனது 12 வயது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுபற்றி அவரது மனைவி, தாராபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அல்லிராணி இன்று ஞாயிற்றுக்கிழமை
சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது தந்தை தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ்,ஆண்டனி விக்டர் நோயல் கைது செய்து. தாராபுரம் குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி , சிறையில் அடைத்தனர்.
