துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் திமுகவினர் வன்முறை , பாஜகவினர் மீது தொடர் தாக்குதல்-தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் திமுகவினர் வன்முறை , பாஜகவினர் மீது தொடர் தாக்குதல்

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் திமுகவினர் நடத்தும் தொடர் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியல் திருத்தும் தொடர்பாக சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அயோத்தி குப்பம் பகுதியில் நேற்று சிறப்பு முகாம் நடந்தது.

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாமில் மேஜை அமைத்து, வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் தொடர்பாக பாஜகவினர் ஜனநாயக கடமையை ஆற்ற முயன்ற போது, திமுக பகுதி செயலாளர்
காமராஜ், 116 வது திமுக வட்ட செயலாளர் சசி தூண்டுதலின் பேரில்
அயோத்தி குப்பம் பகுதியில் பாஜக மீனவர் பிரிவு மாவட்ட தலைவர் ஜெகதீசனை திமுகவை சேர்ந்த ரவுடி விஷ்ணு இரும்பு கம்பியால் தாக்கி அவரது வண்டியையும் உடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

காவல்துறையில் உடனடியாக புகார் அளித்தும் அப்பகுதியின் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உயரதிகாரிகள் அனுமதி இன்றி வழக்கு போட முடியாது. கைது செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் பாஜக நிர்வாகியை தாக்கிய திமுக ரவுடிகள் மீது கைது செய்ய நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியும்
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக புகாரை பெற்றுக் கொண்டு சி.எஸ்.ஆர் புகார் ரசீது கூட இதுவரை வழங்கப்படவில்லை.

மேலும் கடந்த ஆண்டு
இதேபோன்று வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக கட்சிக் கொடியுடன் மேஜை அமைத்த பாஜக நிர்வாகி சுமன் என்பவர், திமுக வட்டச் செயலாளர் சசி மற்றும் ஜெயபிரகாஷ், ரஞ்சித் உள்ளிட்ட திமுகவினரால் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார். பாஜக கடும் போராட்டம் நடத்திய பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் நேற்று அதே அயோத்திக்குப்பம் பகுதியில் நடிகர் விஜயின் கட்சியான தமிழக வெற்றி கழகத்தினரையும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான மேஜை அமைக்க கூடாது என்று திமுக ரவுடிகள் கும்பல் மிரட்டி உள்ளனர்.

ஆனால் மெரினா போலீசார் திமுகவினருக்கு சாதகமாக பஞ்சாயத்து பேசி புகாரை பதிவு செய்யாமல் தமிழக வெற்றி கழகத்தினரை திருப்பி அனுப்பி உள்ளனர்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி, அயோத்தி குப்பம் பகுதியில், திமுகவினர், மாற்றுக் கட்சியினரை தொடர்ந்து மிரட்டி தாக்குதல் நடத்துவதற்கு பின்னணியாக செயல்பட்டு, ரவுடி ராஜ்ஜியம் நடத்தும் திமுக பகுதி செயலாளர் காமராஜ், 116 வது வட்டச் செயலாளர் சசி மீது சென்னை மாநகர காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக பாஜக மீனவர் பிரிவு மாவட்ட தலைவர் ஜெகதீசனை தாக்கிய திமுகவை சேர்ந்த ரவுடி விஷ்ணுவை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும்.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தன்னுடைய சொந்த தொகுதியில் ஜனநாயகத்தை காப்பாற்றும் வகையில், சட்டத்தை நிலைநாட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க, உரிய வழிகாட்டுதலை சென்னை மாநகர காவல் துறை ஆணையாளருக்கு வழங்க வேண்டும்.

ஏ.என்.எஸ்.பிரசாத்
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்
கைபேசி: 9840170721

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் 52 வது பிறந்தநாள் – மக்களுக்கு உணவு வழங்கி கொண்டாடிய தவெக வினர்.

    தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் 52 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு திருச்சி மாநகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்கா சௌகத் வழிகாட்டுதலுடன் திருச்சி மாநகர கிழக்கு மாவட்டம்மலைக்கோட்டை பகுதி செயலாளர் கி.சதிஷ்குமார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில்…

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த துரை வைகோ எம்.பி

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (03.06.2026) சந்தித்தேன். அப்போது எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று முக்கிய கேரிக்கைகளுக்கான கடிதம் வழங்கி, அதற்கான…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *