

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 5 ஆயிரம் சதுரடியில் 5 லட்சம் கைவிரல் ரேகை மூலம் பிரமண்டமாக 100 மாணவர்கள் உதயநிதி ஸ்டாலினை வரைந்து உலக சாதனை படைத்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களை இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மேயர் பிரியா ஆகியோர் வாழ்த்து
சென்னை கொரட்டூரில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு
கன்னியாகுமரியை சேர்ந்த ஓவியர் ஆர்.சிவராமன் தலைமையில் 100 ஓவிய மாணரவர்களை ஒன்றிணைந்து கைரேகையால் உதயநிதி ஸ்டாலின் உருவத்தை வரையும் உலகசாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அதன்படி 5000 சதுர அடி கேன்வாஸில் 100 ஓவிய மாணவர்கள் தனது கட்டை விரல் ரேகை பயன்படுத்தி ரோலகஸ் பெயிண்ட் மூலம் தங்களது கைரேகை பதிவு செய்தனர். 100 மாணவர்கள் சுமார் 50 லட்சம் கைரேகை (thumb print) பதிவு செய்து உதயநிதி ஸ்டாலின் ஓவியத்தை வரைந்து அசத்தினர்.

6 மணி நேரம் வரைந்த இந்த ஓவியம் உலகிலேயே மிகப்பெரிய ஓவியமாக (Unico) யூனிக்கோ உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு உலகசாதனை படைத்த மாணவர்களை வாழ்த்தி சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.
