சீமான் ஒரு சங்கி- தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் குற்றச்சாட்டு.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை வலதுசாரி சித்தாந்தவாதிகள் இயக்கி வருகின்றனர்.

தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் சார்பில் நாளை திருச்சியில் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் ‘மாவீரர் நாள்’ பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும்,சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான தனியரசு, பச்சைத்தமிழகம் அமைப்பின் தலைவர் சுப.உதயக்குமார், பாரிசாலன் உள்ளிட்ட தமிழ் தேசிய உணர்வாளர்கள் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்து திருச்சி பிரஸ் கிளப் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்களான வெற்றி குமரன், வழக்கறிஞர் பிரபு, தனசேகரன், புகழேந்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள்.

வெற்றி குமரன் பேசுகையில்… நாம் தமிழர் கட்சியிலிருந்து பிரிந்து வந்த 60 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர், தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தில் தங்களை இணைந்துக்கொண்டுள்ளனர்.
உண்மையான தமிழ் தேசிய உணர்வாளர்கள் நாம்தமிழர் கட்சியில் இருந்து பிரிந்துவந்து, தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தில் தொடர்ந்து பயணித்து வருகிறோம்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை வலதுசாரி சித்தாந்த வாதிகள் இயக்கி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தை சீமான் சந்தித்ததில் இருந்து, சீமானை யார் இயக்குகிறார்கள் என்கின்ற உண்மை புலப்படுகிறது.

தமிழுக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும், போராடி உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது. அதில் தமிழ் தேசிய உணர்வாளர்கள் 10,000 மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர் என்றார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *