

அறநிலையத்துறை கும்பாபிஷேகத்தை நிராகரித்தது
எலமனூரில் உள்ள பழமையான அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலுக்கான கும்பாபிஷேகம் நடத்த வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தது அறநிலையத்துறை .

கும்பாபிஷேகம் நடந்து (13 11 1992) 32 வருடங்கள் ஆன கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. கல்வெட்டுகளின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
அக்டோபர் இரண்டாம் தேதி எலமனூர் மக்கள் கிராம சபை கூட்டத்தில் தங்கள் ஊரில் உள்ள பழமையான கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தித் தருமாறு கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கை அறநிலையத்துறைக்கு முதல்வரின் முகவரி துறை மூலம் அனுப்பப்பட்டது அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
எலமனூர் மக்களின்தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால்,

எலமனூருக்கு அருகில் உள்ள திருப்பராய்த்துறையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற, பாடல் பெற்ற சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேக பணிகள் நடந்த வண்ணம் உள்ளன. அதனுடன் சேர்த்து எலமனூரில் உள்ள இந்த சின்ன கோயிலுக்கும் கோயிலுக்கும் கும்பாபிஷேகம் நடத்தித் தருமாறு மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
கும்பாபிஷேகம் நடந்து (13 11 1992) 32 வருடங்கள் ஆன எலமனூர் எலும்பு நாச்சி அம்மன் கோயிலுக்கு திருப்பராய்த்துறை சிவன் கோயிலுடன் சேர்த்து கும்பாபிஷேகம் நடத்தித் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த கோரிக்கையை கருணையுடன் பரிசளிக்குமாறு கிராம மக்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறார்கள்.
தற்பொழுது இது சம்பந்தமான மனு கலெக்டருக்கு அப்பீல் செய்யப்பட்டுள்ளது
