
ஏ.என்.எஸ்.பிரசாத் தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்
தமிழக பாஜகவின் ஒரு கோடி உறுப்பினர் சேர்ப்போம், இலக்குக்கு மக்கள் பெரும் ஆதரவு!
கடந்த செப்டம்பர் இரண்டாம் தேதி முதல் நாடு முழுவதும் தொடங்கிய பாஜக உறுப்பினர் சேர்ப்பு முகாம், தமிழகத்தில் பாஜக தொண்டர்கள்,
நிர்வாகிகள் தலைமையில் பூத் வாரியாக பொதுமக்கள் தொடர்பு மூலமாகவும், இணையதளம் வாயிலாகவும்ம சிறப்பாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக 18 வயதிற்கு மேற்பட்ட இளம் வாக்காளர்கள், குறிப்பாக கல்லூரி, மாணவ, மாணவர்கள், இளைஞர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், பட்டியல் இன மக்கள், இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட, பல்வேறு சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், பெருமளவில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த புதிய உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தில், ஏற்கனவே பாஜகவில் இணைந்து பல ஆண்டுகளாக கட்சியில் பணியாற்றிய அனைவரும் 8800002024 என்ற கைப்பேசி எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து புதிய உறுப்பினராக தங்களை புதுப்பித்துக் கொண்டுள்ளனர்.
திருச்சியில் பாஜக 2013 ஆம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னார் தலைமையில் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க இளம் தாமரை மாநாடு தொடங்கி, கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மாபெரும் தர்மப் போராட்டத்தை நேர்மையான அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து பல கூட்டணிகளை ஒருங்கிணைத்து வழி நடத்தி,மக்களுக்கு நம்பிக்கையும் விழிப்புணர்ப்பையும் ஏற்படுத்தியது.
முக்கியமாக கடந்த 2023 ஆம் ஆண்டு திருப்பூரில் உலகத் தமிழர்கள் போற்றி மகிழும் வண்ணம், இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட “என் மண் – என் மக்கள்” யாத்திரை” நிறைவு நிகழ்ச்சி தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் புரட்சியை ஏற்படுத்தியது.
மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்களின் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு திமுக பதில் சொல்ல முடியாமல் திணறியது. தமிழகத்தில் விடியாத திராவிட மாடல் ஆட்சிகளுக்கு முடிவு கட்டி நல்லாட்சி தரக்கூடிய, நம்பிக்கை இயக்கம் பாஜக ஒன்றுதான் என்ற எண்ணம் தமிழக வாக்காளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ்,தமிழர்,
தமிழ்நாடு வளர்ச்சிக்கு ஆற்றிய அரும்பங்கு, மத்திய பாஜக அரசு தமிழக வளர்ச்சிக்கு தீட்டிய திட்டங்கள், லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் என மத்திய அரசின் சாதனைகளை, வளர்ச்சி அரசியலை முன்னிறுத்தி கடந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில் வாக்கு கேட்டார்.
ஆனால் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி, மத்திய மோடி அரசின் சாதனைகளை மறைத்து, அவதூறு அரசியல் செய்து, மதவாத பிரிவினைவாத அரசியல் சூழ்ச்சிகளை கையாண்டு, பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது.
மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்ட உருவாக்கப்பட்ட,
தமிழக பாஜக கூட்டணி பாராளுமன்ற தேர்தலிலே வெற்றி பெறவில்லை என்றாலும், பெரும்பாலான பாராளுமன்ற தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்று, பாராளுமன்றத்திற்கு உட்பட்ட, சட்டமன்ற தொகுதிகளிலும் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக இரண்டாம் இடத்தை பெற்று மக்கள் மனதிலே மிகப்பெரிய நம்பிக்கை ஏற்படுத்தியது
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விரோத ஊழல் திமுக அரசின் ஏதேச்சதிகார ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்ற உறுதியுடன், தமிழகத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பொற்கால ஆட்சி உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் நம்பிக்கையுடன் இந்த முறை பாஜக உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தில் தமிழகம் முழுக்க பெரும் எழுச்சியுடன் அனைத்து தரப்பு மக்களும் பங்கெடுத்துள்ளனர்.
தற்போது 2024 பாஜக உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தில் தற்பொழுது ஏறத்தாழ 50 லட்சம் பேர் இணைந்துள்ளனர். ஆசிரியர்கள் டாக்டர்கள் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் பெரும் திரளாக உறுப்பினர்களாக நேரடியாகவும் இணையதள வாயிலாகவும் தங்களை பதிவு செய்து கொண்டு வருகின்றனர்.
பாஜகவில் புதிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று விரும்பும் நபர்கள் தீவிர உறுப்பினர்களாக தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 50 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு புதிதாக சேர்ந்த உறுப்பினர்கள் அதிக அளவில் தீவிர உறுப்பினர்களாக பங்கெடுத்துக்கொள்ள விரும்பி சேர்ந்து இருப்பது தமிழக பாஜகவிற்கு கூடுதல் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அளித்துள்ளது.
2024 பாஜக உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் ஒரு அரசியல் இயக்கத்தின் கட்சி வளர்ச்சிக்கான உறுப்பினர் சேர்த்து இயக்கமாக இல்லாமல், தமிழகத்தின் அடுத்த தலைமுறையின் மகிழ்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைக்கும் வகையில், அரசியல் சமூக பொருளாதார மறுமலர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் இயக்கமாக தமிழக மக்களின் பெரும் ஆதரவுடன் நடைபெற்றுள்ளது.
ஏ.என்.எஸ்.பிரசாத்
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்
கைப்பேசி: 9840170721