வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினார்.

𝗘𝗟𝗘𝗖𝗧𝗜𝗢𝗡 𝗨𝗣𝗗𝗔𝗧𝗘

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் போன்றவற்றுக்கான பணிகள் வரும் அக்.29ம் தேதி தொடங்குகிறது.

அன்று காலை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இப்பட்டியல் அடிப்படையில்,

திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. வரும் நவ.28ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கு விண்ணப்பிக்கலாம்

.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறுவதையொட்டி தலைமைச் செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி கட்சி, பி.ஏ. சங்மாவின் தேசிய மக்கள் கட்சி ஆகியவை மற்றும் மாநில கட்சிகளான

திமுக, அதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஓவ்வொரு கட்சியின் சார்பிலும் 2 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் நடைமுறைகள், சிறப்பு முகாம் ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளபட்டது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருப்பராய்த்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் இல்லையா? கல்வி வணிகமயமாக்கப்படுகிறதா?87 வயது முதியவரின் ரத்தக் கண்ணீர் மனு! “நான் இழந்த கல்வியை… என் ஊர் குழந்தைகள் இழக்கக் கூடாது!” ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்…

    உயிரைக் கொடுத்து… நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள்!செவி சாய்ப்பாரா தமிழக முதல்வர் விஜய் !உடனடி, அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?அமைச்சர் சரத்குமார்

    ராணுவ வீரர்களின் தியாகம்… விலையில்லாச் சொத்து! முப்படைத் தளபதி பதக்க வீரர்களுக்கு தமிழக முழுவதும் கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கக் கோரிக்கை. திருச்சி: நாட்டின் எல்லையில் விழித்திருந்து தாய்நாட்டைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், முப்படைத் தளபதிகளின்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *