Chennai-Press-Club|Election|Press-Club

25 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு டிச.15-ல் தேர்தல்: நீதிபதி வீ.பாரதிதாசன் அறிவிப்பு

சென்னை, நவ. 29: சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு டிசம்பர் 15-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், அதற்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 30-ம் தேதி (சனிக்கிழமை) தொடங்கும் என்றும் தேர்தல் அதிகாரியும், சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியுமான வீ.பாரதிதாசன் அறிவித்தார்.

52 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு (பிரஸ் கிளப்) பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலை முறையாக நடத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்காக பொதுக்குழு கூட்டப்பட்டு, வழிகாட்டுதல் குழு, உபக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, புதிய உறுப்பினர் சேர்க்கை, பழைய உறுப்பினர் புதுப்பித்தல் பணிகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.

இதனையடுத்து, பத்திரிகையாளர் மன்றத்துக்கு தேர்தல் நடத்துவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி வீ.பாரதிதாசன் கடந்த 18-ம் தேதி தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு நேரில் வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து தேர்தல் அட்டவணையை தேர்தல் அதிகாரி நீதிபதி பாரதிதாசன் நேற்று மாலை வெளியிட்டார். இதனை தகவல் பலகையிலும் அறிவிப்பு செய்து அதனை பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

சென்னை பத்திரிகையாளர் மன்ற துணை விதிப்படி, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரியாக நவம்பர் 18-ம் தேதி நான் நியமிக்கப்பட்டேன்.

தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பது தேர்தல் விதிமுறை ஆகும். அந்த வகையில் டிசம்பர் 17-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு ஒரு தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், ஒரு பொதுச்செயலாளர், ஒரு இணைச் செயலாளர், ஒரு பொருளாளர் ஆகிய 6 நிர்வாகிகளையும், 5 செயற்குழு உறுப்பினர்களையும் தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படுகிறது.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 7-ம் தேதி முடிவடையும்.

தினமும் (ஞாயிறு விடுமுறை தவிர) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனுக்கள் டிசம்பர் 9-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பரிசீலிக்கப்படும். டிசம்பர் 10-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

டிசம்பர் 15-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

என்னிடம் வழங்கப்பட்ட உறுப்பினர்கள் பட்டியல்படி, மொத்தம் 1502 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த பட்டியலில் உள்ள நபர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் முடியும்.

தேர்தலின்போது, உறுப்பினர்களுக்கு புதிதாக வழங்கப்பட்ட அடையாள அட்டையை கண்டிப்பாக காண்பிக்க வேண்டும்.

தேர்தல் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும். தேர்தல் அமைதியான முறையில் நடைபெற உறுப்பினர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு நீதிபதி பாரதிதாசன் கூறினார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *