மணப்பாறை பகுதியில் ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மற்றும் பள்ளி கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார். வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இனாம்ரெட்டியபட்டி மற்றும் அயன்ரெட்டியபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் தலா ரூ.32 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக்கட்டிடங்கள், வையம்பட்டி மற்றும் தேக்கமலைகோவில்பட்டியில் தலா ரூ.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்கள், கிருஷ்ண சமுத்திரம் கிராமத்தில் ரூ.10.93 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் என புதிய கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். முன்னதாக பள்ளிக்கு வந்த அமைச்சருக்கு குழந்தைகள் ரோஜா மலர்கள் கொடுத்து வரவேற்றனர். விழாவில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, திட்ட இயக்குனர் கங்காதரணி, வையம்பட்டி யூனியன் சேர்மன் குணசீலன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    நூற்றுக்கால் மண்டபத்தில் நர்சரி… குழந்தைகளின் உயிருடன் யார் விளையாடினார்கள்? “ஆயிரம் ஆண்டு கோவில்… அனுமதியில்லா பள்ளி… யார் கொடுத்த தைரியம்?”

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், வழிபாட்டு மரபின் சின்னமாக இல்லாமல், பல ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிய மழலையர் பள்ளியின் வகுப்பறையாக மாற்றப்பட்டிருந்தது கல்வித்துறையின் ஆய்வில் வெளிச்சத்துக்கு…

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு!

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு! பயணிகள் அலறல்.. பஸ் உரிமையாளர்கள் மிரட்டல்.. போக்குவரத்து துறை தூங்குவது ஏன்? “பச்சக்கிளி முத்துச்சாரம்.. பார்க்காத பூமி ஏதம்!” ஆனால், திருச்சியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி, தனியார்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *