

இன்று (30.11.2024) அரசு ஆதி திராவிட நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி காட்டுரில்
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி அவர்கள் NSNOP – Success in Health Care and Education (SHE)யின்சாற்பாக
மாணவியர்களுக்கு Basic Life Support (BLS) என்ற மாரடைப்பு நிலையில் உள்ள நோயளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதற்கு முன்வரை உள்ள அவசர கால முதலுதவியை எவ்வாறு வழங்குவது என்பதை குறித்த CPR (கார்டியோ நுரையீரல் புத்துயிர்) முதலுதவி பயிற்சியானது பயிற்சி பெற்ற மருத்துவ பணியாளாகள் மூலம் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் அமைச்சர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி துவாக்குடியில் 25.11.2024 அன்று SHE என்ற திட்டத்தின் மூலம் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் 75 மாணவிகள் மேலும் இப்பயிற்சியானது 26.11.2024 அன்று அரசு மேல்நிலைப்பள்ளி தேனேரிப்பட்டியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் 130 மாணவ மாணவியர்களுக்கும் மற்றும் 28.11.2024, 29.11.2024 ஆகய நாட்களில் அரசு ஆதி திராவிட நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி காட்டுர்பாப்பாக்குறிச்சியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் 320 மாணவ மாணவியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு CPR முதலுதவி குறித்த விழிப்புணர்வை பெற்றனர்.
CPR (கார்டியோ நுரையீரல் புத்துயிர்) முதலுதவி பயிற்சியானது திருமதி. ஆர்த்தி ராஜேந்திரன் மேலாளர், நேசனல் ஹெல்த் கேர், UK, திரு. அருண் ஸ்டிபன் ஜெய்சிங், Educaitonal Service Specialist, LAERDAL , Senior Territory Manager, LAERDAL ஆகியோர்களால் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வை
திருச்சிராப்பள்ளி மாவட்ட
முதன்மைக்கல்வி அலுவலர்
திருமதி.கோ.கிருஷ்ணப்பிரியா அவர்கள் ஒருங்கிணைத்தார்கள். இந்நிகழ்வில் மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன் மற்றும் மாமன்ற உறுப்பினர் நீலமேகம் ஆகியோர் கலந்து கொண்டனர்